Home உலகம் இலங்கை போர்க்குற்ற ஆவணப்படம் ஜெனிவாவில் திரையீடு

இலங்கை போர்க்குற்ற ஆவணப்படம் ஜெனிவாவில் திரையீடு

710
0
SHARE
Ad

No-Fire-Zone-poster-Sliderஜெனிவா, மார்ச்2 : இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பான ஆவணப்படம், அந்நாட்டின் கடும் எதிர்ப்பை மீறி, ஜெனிவாவில் திரையிடப்பட்டது.

இலங்கையில், 2009ல் நடைபெற்ற உள்நாட்டு போரின் இறுதி கட்டத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். போர் இல்லாத பகுதியாக, இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட பகுதியில் தஞ்சம் அடைந்த மக்கள், குண்டு வீசி கொல்லப்பட்டனர்.

அத்துடன், மனித உரிமை மீறல்களிலும், இலங்கை ராணுவம் ஈடுபட்டதாக, குற்றம் சாட்டப்பட்டது. இதை, இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே மறுத்து வந்தார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் குறித்து, கல்லம் மக்ரே என்பவர் தயாரித்துள்ள, “நோ பயர் சோன்’ (No Fire Zone) – என்ற ஆவணப்படம், இலங்கையின் கடும் எதிர்ப்பையும் மீறி, நேற்று முன் தினம், சுவிட்சர்லாந்தில் உள்ள, ஜெனிவா நகரில், திரையிடப்பட்டது.

இந்த ஆவணப்படத்தை திரையிடுவதற்கு முன் பேசிய, கல்லம் மக்ரே , “இலங்கை ராணுவத்தின் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு, இப்படம் சாட்சியாக உள்ளது’ என்றார்.

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், இலங்கை ராணுவ பதுங்கு குழியில் வைக்கப்பட்டு, பின் சுட்டுக் கொல்லப்பட்ட, புகைப்பட ஆதாரம் உள்ளிட்ட, அதிர்ச்சியூட்டும் பல காட்சிகள், இந்த ஆவணப் படத்தில் இடம் பெற்றிந்தன.

“இது தொடர்பாக சர்வதேச விசராணைக்கு உத்தரவிட வேண்டும்’ என, இந்த ஆவணப்படத்தை திரையிட்ட, “சர்வதேச பொது மன்னிப்பு’ (International Amnesty) அமைப்பு, வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையே, “இந்த ஆவணப்படம், திட்டமிடப்பட்ட மோசமான பொய் பிரச்சாரம்’ என, ஜெனிவாவுக்கான இலங்கை தூதர், ரவிநாதா ஆர்யசின்ஹா தெரிவித்துள்ளார்.