Home இந்தியா மு.க.ஸ்டாலின் மணிவிழா: தலைவர்கள் வாழ்த்து

மு.க.ஸ்டாலின் மணிவிழா: தலைவர்கள் வாழ்த்து

856
0
SHARE
Ad

Stalin-MKசென்னை, மார்ச் 2 – 60 வயதை அடைந்து விட்ட, மு.க.ஸ்டாலின் மணிவிழா நேற்று சென்னையில் நடந்தது. கருணாநிதி, அன்பழகன் மற்றும் குடும்பத்தினர், ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

திமுக பொருளாளரும் முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு நேற்று 60ம் பிறந்தநாள். இதை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள ஓட்டலில் நேற்று காலை 7 மணிக்கு மணி விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.

கருணாநிதி மாலை எடுத்து கொடுக்க, ஸ்டாலினும் மனைவி துர்காவும் மாலை மாற்றிக் கொண்டனர். கருணாநிதியிடம் வாழ்த்தும்  பெற்றனர்.

#TamilSchoolmychoice

மணிவிழாவில் கருணாநிதியின் குடும்பத்தினர் திரளாகக் கலந்து கொண்டு ஸ்டாலின் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். திமுக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் காலை 9.30 மணிக்கு மெரினா கடற்கரைக்கு சென்ற ஸ்டாலின், அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து வணங்கினார். அதன்பின் வேப்பேரியில் உள்ள பெரி யார் திடலுக்கு சென்றார். அவரை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வரவேற்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

பெரியார் நினைவிடத்தில் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.அதைத் தொடர்ந்து காலை 10.15 மணிக்கு ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்துக்கு ஸ்டாலின் வந்தார். அங்கு அவருக்கு பட்டாசு வெடித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது.

அங்கு குவிந்திருந்த திமுக தொண்டர்கள் வாழ்த்து முழக்கம் எழுப்பினர். அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் தென்சென்னை மாவட்ட திமுக சார்பில் ஏற்பாடு செய்திருந்த பிரமாண்ட கேக்கை ஸ்டாலின் வெட்டினார்.