லாஸ் ஏஞ்செல்ஸ், மார்ச் 17 – அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்திய பல் மருத்துவ மாணவி அவரின் வீட்டிலேயே மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தியாவைச் சேர்ந்தவர் ரந்திர் கவுர் (37).
பஞ்சாபைச் சேர்ந்த இவர் கலிபோர்னியா சான் பிராஸ்கோ பல்கலைக் கழகத்தில், அனைத்துலக பல் மருத்துவம் படித்து வந்தார். கலிபோர்னியாவின், அல்பேனி நகரில், கெயின்ஸ் அவென்யூ எனும் குடியிருப்பில் தங்கியிருந்தார்.
இந்நிலையில், கடந்த 8-ஆம் தேதி, அப்பகுதியில் உள்ள சீக்கிய குருத்வாரா கோவிலில் வழிபாட்டுக்குச் சென்று திரும்பிய ரந்திர் கவுர் மாலையில், அவரின் குடியிருப்பில் மர்ம நபர்களால் தலையில் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதை கண்ட அவரின் உறவினர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இது குறித்து அல்பேனி நகர போலீசார் கூறுகையில், ”கவுர் பயன்படுத்திய பொருட்கள் சில அப்பகுதியிலிருந்து 2 மைல் தொலைவில் ஒரு குப்பைக்கிடங்கில் வீசப்பட்டுள்ளன”.
அதைமீட்டு தீவிரவிசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர். கவுர் பயன்படுத்திய பொருட்கள் கைப்பற்ற விவரங்களை போலீசார் தகவல் தெரிவிக்க மறுத்துவிட்ட நிலையில், கவுர் குடியிருந்த வீடு அருகே வசிக்கும் பெண் ஒருவர் தெரிவித்தார்.
கவுர் பயன்படுத்திய கைப்பை, ரத்தக் கறைபடிந்த அவரின் மருத்துவ ஆடை போன்றவைகள் ரிச்மாண்ட பகுதி குப்பை கிடங்கில் கிடந்துள்ளன. அந்த கைப்பையில், பல்கலைக்கழக அடையாள அட்டை, செல்பேசி, போன்றவைகள் இருந்ததாக அவர் தெரிவித்தார்.