Home இந்தியா கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா நெதர்லாந்தில் பணிபுரியும் பெண்ணை மணக்கிறார்!

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா நெதர்லாந்தில் பணிபுரியும் பெண்ணை மணக்கிறார்!

614
0
SHARE
Ad

Suresh Raina soulmate Priyanka,புதுடெல்லி, மார்ச் 17 – இந்திய  கிரிக்கெட் அணியின் இளம் முன்னணி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா.  ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் தற்போது  உலக கோப்பை போட்டியில் விளையாடி வருகிறார். உலக கோப்பையில் 6 போட்டிகளில் விளையாடிய ரெய்னா 212 ரன்கள் எடுத்து உள்ளார்.

1 சதம்,  1 அரை சதம் அடித்து உள்ளார்.ஜிம்பாப் வேக்கு எதிராக அவர் சதம் அடித்து ஆட்டம் இழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. தர்போடு சுரேஷ் ரெய்னாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மணமகள் பெயர் பிரியங்கா சவுத்திரி.

உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரைச் சேர்ந்தவர். சுரேஷ் ரெய்னா தாயாரின் நெருங்கிய  தோழியின் மகள் ஆவார். குழந்தையாக இருக்கும்போதே இருவரது குடும்பத்துக்கும் நல்ல பழக்கம் இருந்து வந்ததாம். பின்னர் பிரியங்காவின் குடும்பத்தினர் பஞ்சாப் மாநிலத்துக்கு இடம் பெயர்ந்து விட்டனர்.

#TamilSchoolmychoice

அதன்பிறகு இரு குடும்பத்துக்கும் இடையே தொடர்பு இல்லாமல் போனது.சில வருடங்களுக்கு முன்பு இருவரது குடும்பத்தினரும் ஒரு விழாவில் சந்தித்து கொண்டனர். அப்போது மீண்டும் நட்பு ஏற்பட்டது. பிரியங்காவை  பார்த்த ரெய்னாவின் தாயார் தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.

இதற்கு  ரெய்னாவும் சம்மதித்து விட்டார். மணமகள் பிரியங்கா தற்போது நெதர்லாந்தில் நாட்டில் ஒரு வங்கியில்  பணிபுரிந்து வருகிறார். ரெய்னா- பிரியங்கா திருமணம் வருகிற ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது.

உலக கோப்பை இறுதிப்போட்டி வருகிற 29-ஆம் தேதி நடக்கிறது. மறுநாள் இந்திய அணி டெல்லி திரும்புகிறது. ஏப்ரல் 1-ஆம் தேதி ரெய்னா தனது நண்பர்களுக்கு விருந்து கொடுக்கிறார். 3-ஆம் தேதி நடைபெறும் திருமணத்தில் கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொள்கிறார்கள்.