Home நாடு நூருல் இசாவைத் தொடர்ந்து நூருல் நூகாவிடமும் காவல்துறை விசாரணை!

நூருல் இசாவைத் தொடர்ந்து நூருல் நூகாவிடமும் காவல்துறை விசாரணை!

551
0
SHARE
Ad

Nurul Nuhaகோலாலம்பூர், மார்ச் 18 – அன்வார் இப்ராகிமின் மூத்த மகள் நூருல் இசாவை தடுப்புக் காவலில் இருந்து நேற்று விடுதலை செய்த காவல்துறை, கடந்த மார்ச் 7-ம் தேதி கிட்ட லவான் பேரணியில் பங்கேற்றதற்காக அவரது சகோதரி நூருல் நூகாவை நேற்று தடுப்புக் காவலில் வைத்தது.

நேற்று விசாரணைக்காக டாங் வாங்கி காவல்நிலையத்திற்கு சென்ற அவரை, காவல்துறையினர் தடுத்து வைத்ததோடு, அவரிடம் அப்பேரணி குறித்து வாக்குமூலங்களையும் காவல்துறை பதிவு செய்தது.

மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, பிகேஆரின் மனித உரிமை மற்றும் சட்ட அமைப்பின் துணைத் தலைவரான எஸ்.ஜெயதாசையும் இதே குற்றச்சாட்டின் பேரில் நேற்று காவல்துறை கைது செய்துள்ளது.

டாங் வாங்கி காவல் நிலையத்திற்கு வந்தபோது தாம் கைது செய்யப்பட்டதாக நட்பு ஊடகங்களின் வாயிலாக ஜெயதாஸ் பதிவிட்டுள்ளார்.

கோலாலம்பூரில் சட்டவிரோதமாக கூடியதற்காக குற்றவியல் சட்டப்பிரிவு 143ன் கீழ் தாம் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.