Home கலை உலகம் ஜெய்,ஆண்ட்ரியா நடிக்கும் ‘வலியவன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

ஜெய்,ஆண்ட்ரியா நடிக்கும் ‘வலியவன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

1172
0
SHARE
Ad

valiyavanசென்னை, மார்ச் 18 – எஸ்.கே. ஸ்டியோஸ் சார்பில் சம்பத் தயாரிப்பில் பெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமாக தயாராகும் படம் “வலியவன்”. ஜெய் மற்றும் ஷர்வானந்த் நடித்த “எங்கேயும் எப்போதும்”, விக்ரம் பிரபு நடித்த “இவன் வேற மாதிரி” போன்ற வெற்றி படங்களை இயக்கிய சரவணன் இப்படத்தை இயக்குகிறார்.

வலியவன் படத்தின் நாயகனாக ஜெய் மற்றும் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்கின்றனர். இவர்களுடன் அழகம் பெருமாள், “பண்ணையாரும் பத்மினியும்” பாலா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் முதற் கட்ட படபிடிப்பு சென்னையில் துவங்கி தொடர்ந்து டெல்லியில் நடைபெற்றது. மேலும் படத்தின் முக்கிய காட்சிகள் ஹரித்துவார் மற்றும் குளுமணாலியில் படமாக்கப்பட்டது. டி.இமான் இசையமைக்க படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் தினேஷ் கிருஷ்ணா.

#TamilSchoolmychoice

மென்மையான காதலை மையமாகக்  கொண்டு அனைவரும் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமான முறையில் நேர்த்தியாக படம் எடுக்கப்பட்டு வருகிறதாம். தற்போது இப்படத்தில் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.

‘வலியவன்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே காணலாம்: