Home உலகம் கிரிக்கெட் கால் இறுதிச் சுற்று: இன்று இந்தியா – வங்கதேசம் மோதல்!

கிரிக்கெட் கால் இறுதிச் சுற்று: இன்று இந்தியா – வங்கதேசம் மோதல்!

606
0
SHARE
Ad

Bangladesh beating England in World Cupமெல்போர்ன், மார்ச் 19 – உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் 2-வது கால் இறுதியில், இந்தியா இன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. ‘பி’ பிரிவில் இந்திய அணி தொடர்ச்சியாக 6 லீக் ஆட்டங்களிலும் அபாரமாக வென்று முதலிடம் பிடித்தது.

கடந்த 2011-ஆம் ஆண்டு உலக கோப்பையில் கடைசி 4 ஆட்டங்களிலும் வென்றிருந்த டோனி தலைமையிலான இந்திய அணி, தொடர்ச்சியாக 10-வது வெற்றியுடன் சாதனை படைத்தது. இப்போட்டி மலேசிய நேரப்படி காலை 11.30 மணிக்கு துவக்குகிறது.

எல்லா வகையிலும் வலுவாக அமைந்துள்ள இந்திய அணி, கால் இறுதியில் வங்கதேசத்தையும் வீழ்த்தி வெற்றிப் பயணத்தை தொடரும் உறுதியுடன் களமிறங்குகிறது.

#TamilSchoolmychoice

அதே சமயம், முதல் முறையாக உலக கோப்பை கால் இறுதி சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ள வங்கதேச அணியும், இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் உத்வேகத்துடன் உள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் காயம் காரணமாக களமிறங்காத கேப்டன் மோர்டசா, கால் இறுதிக்கு தலைமையேற்க தயாராகி உள்ளார்.  முஷ்பிகுர் ரகிம், ஷாகிப் அல் ஹசன், இம்ருல் கேயஸ் ஆகியோரும் கணிசமாக ரன் குவித்தால் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம்.

மெல்போர்ன் ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என்பதால், முதலில் பேட் செய்யும் அணி 300+ ரன் எடுத்தால் மட்டுமே எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும். இரு அணிகளுமே அரை இறுதிக்கு முன்னேற முயர்ச்சிப்பதால், ஆட்டம் விருவிருப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.