Home நாடு சபா, செம்பூர்ணா தாக்குதலில் மேலும் 5 போலீஸ் படைவீரர்கள் பலி

சபா, செம்பூர்ணா தாக்குதலில் மேலும் 5 போலீஸ் படைவீரர்கள் பலி

719
0
SHARE
Ad

Ismail-Omar-IGP-Sliderசெம்பூர்ணா, மார்ச் 3 – சபா லகாட் டத்து பகுதியை சூலு சுல்தானின் ஆயுதம் தாங்கிய படைவீரர்கள் ஆக்கிரமிப்பு செய்து கொண்டுள்ள பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில் சபாவின் செம்பூர்ணா பகுதியில் மற்றொரு ஆயுதம் தாங்கிய கும்பல் நுழைந்துள்ளது என்ற தகவலைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசாரின் மீது தாக்குதல் நடந்ததில் 5 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டதாக காவல் துறையின் தலைவர் இஸ்மாயில் ஓமார் (படம்) உறுதிப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து நடந்த சண்டையில் ஆக்கிரமிப்பு கும்பலைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் போலீஸ் தலைவர் கூறியுள்ளார்.

லகாட் டத்து பெல்டா சபாஹான் பகுதியிலிருந்து வழங்கிய பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இஸ்மாயில் ஓமார், “எங்களுக்குக் கிடைத்த தகவலின் படி ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று செம்பூர்ணா பகுதியிலுள்ள கம்போங் ஸ்ரீ ஜெயா சிமுனுல் என்ற கிராமத்திற்குள் நுழைந்துள்ளதாக அறிந்து செம்பூர்ணா காவல் நிலையத்திலிருந்து ஒரு காவல் துறை குழு ஒன்று அங்கு சென்றது. அங்கு அவர்கள் சென்றவுடனேயே அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என்று இஸ்மாயில் ஓமார் அந்த பத்திரிக்கை சந்திப்பில் விளக்கியுள்ளார்.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து அந்த கிராமப் பகுதி போலீஸ் துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கின்றது.

லகாட் டத்து பகுதியில் அத்து மீறி நுழைந்துள்ள குழுவினருக்கும் இப்போது செம்பூர்ணா பகுதியில் நுழைந்திருப்பதாக கூறப்படும் குழுவினருக்கும் தொடர்பு ஏதும் இருக்கின்றதா அல்லது வேறு வேறு குழுக்களா என்பது ஆராயப்பட்டு வருவதாகவும் போலீஸ் தலைவர் கூறியுள்ளார்.

பொதுத் தேர்தலுக்கு முன்பாக நிகழ்ந்துள்ள இந்த சம்பவங்கள் சபாவிலும் நாட்டின் மற்ற பகுதிகளிலும் தேசிய முன்னணி அரசாங்கத்தின் தோற்றத்தை வெகுவாகப் பாதித்துள்ளதாக கூறப்படுகின்றது.

காரணம் நாட்டில் ஒரு காலத்தில் நடந்த கம்யூனிஸ்ட் ஊடுருவல்களுக்கும் தாக்குதல்களுக்கும் பிறகு மிக அதிகமான அளவில் போலீஸ்காரர்கள் ஆயுதம் தாங்கிய கும்பலின் தாக்குதலால் மரணமடைந்துள்ளது இதுதான் முதன்முறை என்றும் கூறப்படுகின்றது.