Home நாடு 3.1 பில்லியன் ரிங்கிட் கொவிட் சிறப்பு நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன

3.1 பில்லியன் ரிங்கிட் கொவிட் சிறப்பு நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன

655
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று முதல் 3.1 பில்லியன் ரிங்கிட் கொவிட் நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன என பிரதமர் இஸ்மாயில் சாப்ரி அறிவித்துள்ளார்.

இதன் மூலம் 10 மில்லியன் மக்கள் பயனடைவர். குறைந்த வருமானமுடைய பி-40 பிரிவினர், நடுத்தர வருமானமுடைய எம்-40 பிரிவினர் ஆகியோருடன், திருமணமாகாத தனிநபர்களும் இந்த சிறப்பு உதவித் தொகையைப் பெறுவர்.

கொவிட் சிறப்பு உதவித் தொகையை வழங்குவதன் மூலம் பாதிப்படைந்த மக்கள் தங்களின் பிரச்சனைகளை ஓரளவுக்குத் தீர்த்துக் கொள்ள முடியும் என்றும் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இன்று காலை முதல் இந்த கொவிட் சிறப்பு உதவி நிதி விநியோகத்தை பிரதமர் மேற்பார்வையிட்டார். நிதி அமைச்சர் தெங்கு சாப்ருலுடனும் தொடர்பு கொண்டு நிதி விநியோகம் தங்கு தடையின்றி சுமுகமாக நடைபெறுகிறதா என்பதையும் பிரதமர் கண்டறிந்தார்.

இதற்கிடையில் நிதியமைச்சர் தெங்கு சாப்ருலும் சில பிஎஸ்என் வங்கிக் கிளைகளுக்கு நேரடியாக வருகை தந்து கொவிட் சிறப்பு நிதி உதவிகள் விநியோகத்தை மேற்பார்வையிட்டார்.

வங்கிக் கணக்குகள் இல்லாதவர்களுக்கு ரொக்கப் பற்றுச் சீட்டு (கேஷ் வவுச்சர்) மூலம் பணம் விநியோகிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal