Home உலகம் 19 நாட்களில் 57 மாடிக் கட்டிடம் – சீனா சாதனை (காணொளியுடன்)!

19 நாட்களில் 57 மாடிக் கட்டிடம் – சீனா சாதனை (காணொளியுடன்)!

581
0
SHARE
Ad

Untitledபெய்ஜிங், மார்ச் 24 – பத்தம்போதே நாட்களில் 57 மாடிக் கட்டிடத்தை உருவாக்கி சீனா சாதனை படைத்துள்ளது. மத்திய சீனாவில் உள்ள ஹுனான் மாகாண தலைநகரான சங்ஷாவில் எழும்பியுள்ள இந்த கட்டிடத்தின் முதல் 3 மாடி பகுதிகள் ஒவ்வொரு செங்கல்லாக அடுக்கி ஒரே நாளில் கட்டி முடிக்கப்பட்டன.

அதன் பின்னர், ஏற்கனவே அச்சில் வார்க்கப்பட்டு, காய்ந்து தயார் நிலையில் இருந்த கான்கிரீட் துண்டங்கள் ராட்சத லாரிகளில் ஏற்றி வரப்பட்டன. அவற்றை பொறியாளர்கள் ராட்சத கிரேன் எந்திரத்தின் மூலம் உரிய இடத்தில் நிலை கொள்ள வைத்தனர். இந்த நடைமுறையை 57 மாடிகளுக்கான செய்தனர்.

மேலும் 57 மாடிக் கட்டிடத்தின் தூண் வேலைகளும் இதே போன்று செய்யப்பட்டன. பின்னர், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு, மாசுகளின் பாதிப்பு இருக்காத ‘குவாட்ரா கிளாஸ்’ (Quattro Glass)-களின் மூலம் கட்டிடத்தின் சுவர்கள் ஒட்டி இணைக்கப்பட்டன.

#TamilSchoolmychoice

இப்படி தொடர்ச்சியாக 19 நாட்களும் இரவு பகலாக நூற்றுக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்டு கட்டிடத்தின் பணியை கனகச்சிதமாக நிறைவு செய்துள்ளனர்.

திட்டமிட்டபடி மிகக் குறுகிய காலத்தில் முடிக்கப்பட்ட இந்த கட்டிடத்தில் 800 அடுக்ககங்கள் அமைந்துள்ளன. சுமார் 4 ஆயிரம் பேர் வரை இங்கு வசிக்கலாம். இதை கட்டி முடித்த கட்டுமான நிறுவனம் ஏற்கனவே சங்ஷா நகரில் 15 நாட்களில் 30 மாடி கட்டிடத்தை கட்டி முடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி கட்டுமான நிறுவனத்தின் முக்கிய அதிகாரி சியோ சேன்கன் கூறுகையில், “தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த கட்டிடத்தை 97 அடுக்குகள் கொண்டதாக உருவாக்க திட்டமிட்டிருந்தோம்.

ஆனால் அருகாமையில் விமான நிலையம் அமைந்துள்ளதால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. மனித வரலாற்றிலேயே முதல் முறையாக இதைப் போன்ற கட்டுமான தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது இதுவே முதல்முறை” என்று கூறியுள்ளார்.

கட்டுமானப் பணிகளின் காணொளியை கீழ் காண்க:

https://www.youtube.com/watch?v=Y4TkwdsWF4M