Home வணிகம்/தொழில் நுட்பம் ஏர் ஆசியாவின் 3 மில்லியன் இருக்கைகள், சிறப்பு சலுகைகள்!

ஏர் ஆசியாவின் 3 மில்லியன் இருக்கைகள், சிறப்பு சலுகைகள்!

738
0
SHARE
Ad

AirAsia_02புதுடெல்லி, மார்ச் 24 – ஏர் ஆசியா நிறுவனம் இந்தியா-மலேசியா விமான சேவை மற்றும் இந்தியாவின் உள்நாட்டு விமான சேவைகளுக்கு பல்வேறு சிறப்பான சலுகைகளை அறிவித்துள்ளது.

மலிவு விலை விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் ஆசியா, நேற்று இந்தியா-மலேசியா உள்ளிட்ட அதன் முக்கிய போக்குவரத்து முனையங்களுக்கு 3 மில்லியன் இருக்கைகள் இருப்பதாக அறிவித்துள்ளது.

இதன் மூலம் பயணர்கள் விசாகப்பட்டினம்-கோலாலம்பூர் மற்றும் கொச்சி-கோலாலம்பூருக்கு ஒரு வழிக் கட்டணமாக முறையே ரூபாய் 3,399 மற்றும் 3,699-ல் பயணம் மேற்கொள்ளலாம்.

#TamilSchoolmychoice

இதற்கான கட்டண முன்பதிவு மார்ச் 23-ம் தேதி (நேற்று) தொடங்கி ஏழு நாட்களுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவைப் பயன்படுத்தி 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 முதல் 2016-ம் ஆண்டு மே 31-ம் தேதி வரை பயணம் செய்யலாம்.

அதேபோல் பெங்களூர், கொல்கத்தாவில் இருந்து கோலாலம்பூருக்கு ஒரு வழி கட்டணமாக ரூபாய் 6,999 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருச்சி, ஹைதராபாத்தில் இருந்து கோலாலம்பூருக்கு ரூபாய் 4,699 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஏர் ஆசியா அறிவித்துள்ளது.

ஏர் ஆசியா இந்தியா:

தாய் நிறுவனமான ஏர் ஆசியாவின் விலைக் குறைப்பு நடவடிக்கையை ஏர் ஆசியா இந்தியா நிறுவனமும் பின்பற்றி, உள்நாட்டு விமான போக்குவரத்தில் விலைக் குறைப்பில் ஈடுபட்டுள்ளது.

பெங்களூர்-கொச்சி, பெங்களூர்-கோவா முறையே ரூபாய் 1,390 மற்றும் 1,690-ல் பயணம் மேற்கொள்ளலாம். அதேபோல் பெங்களூர்-ஜெய்பூருக்கு 3,290 ரூபாயிலும், பெங்களூர்-சண்டிகருக்கு 3,490 ரூபாயிலும் பயணம் மேற்கொள்ள  முடியும்.

இது தொடர்பாக ஏர் ஆசியா இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் மிட்டு சண்டில்யா கூறுகையில், “ஒவ்வொரு இந்தியரும் மலிவு விலையில் விமான போக்குவரத்தினை மேற்கொள்ள எங்கள் நிறுவனத்தின் தொடர்ச்சியா முயற்சி இதுவாகும்” என்று கூறியுள்ளார்.