Home உலகம் இந்தியாவுடன் நட்புறவு – தேசிய தின நாளில் பாகிஸ்தான் விருப்பம்!

இந்தியாவுடன் நட்புறவு – தேசிய தின நாளில் பாகிஸ்தான் விருப்பம்!

647
0
SHARE
Ad

Indiaஇஸ்லாமாபாத், மார்ச் 24 – இந்தியாவுடன் நட்புறவையே நாங்கள் விரும்புகின்றோம் என பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹுசைன் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் தேசிய தினம் நேற்று அந்நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

தலைநகர் இஸ்லாமாபாத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதன் முறையாக நடைபெற்ற தேசிய தின அணிவகுப்பு மரியாதையை அந்நாட்டின் அதிபர் மம்னூன் ஹுசைன் ஏற்றுக்கொண்டார்.

முப்படை வீரர்கள் மற்றும் பொதுமக்களிடையே தேசிய தின சிறப்புரையாற்றிய மம்னூன் ஹுசைன், “இந்தியா-பாகிஸ்தான் இடையே வலிமையான நட்புறவு உருவாக வேண்டும். அதனையே நாங்கள் விரும்புகின்றோம். காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட எல்லா பிரச்சனைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் சுமூகமான தீர்வு காண வேண்டும் என்று நினைக்கிறோம்.”

#TamilSchoolmychoice

“இது தொடர்பாக இரு நாடுகளுக்கிடையிலும் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார். இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் நட்புறவு பற்றி இந்தியப் பிரதமர் மோடி கூறுகையில், “பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஒழித்தால் அவர்களுடன் நட்பு பாராட்ட நாங்கள் தயாராக உள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.