Home உலகம் லீ குவான் யூவுக்கு உலகத் தலைவர்கள் அஞ்சலி!

லீ குவான் யூவுக்கு உலகத் தலைவர்கள் அஞ்சலி!

707
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 24 – சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ குவான் யூவின் மறைவிற்கு உலகத் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

அது குறித்த விவரம் பின்வருமாறு:

இங்கிலாந்து

#TamilSchoolmychoice

லீ குவான் யூவுக்கு சரித்திரத்தில் உறுதி செய்யப்பட்ட இடம் இருந்தது என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் டோனி பிளேர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில், நவீன அரசியலை முதலில் புரிந்துகொண்ட தலைவர் லீ குவான் யூ என்று கூறியுள்ளார்.

David

கனடா

லீ குவான் யூவின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்ததாக கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் குறிப்பிட்டுள்ளார்.

stephen_harper

“அவர் (லீ குவான் யூ) அனைவராலும் மிக உயர்வாக மதிக்கப்பட்ட ஒரு தலைவர். நிதி, கப்பல்துறை, கல்வி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சிங்கப்பூரை வளர்ந்த நாடு என்ற நிலையில் இருந்து அனைத்துலக அளவில் முன்னணிக்கு கொண்டு வந்தவர்,” என்று ஸ்டீபன் ஹார்ப்பர் தெரிவித்துள்ளார்.

மெக்சிகோ

Enrique-Pena-Nieto-Mexico-president

மெக்சிகோ அதிபர் என்ரிக் பினா நிட்டோ, ஸ்பானிய மொழியில் ட்விட்டரில் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் மறைவுச் செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான்

லீ குவான் யூ அனைவருக்கும் ஒரு முன்மாதிரி தலைவராக விளங்கினார் என்றும், அவரது அறிவாற்றல் என்றென்றும் நம்முடன் நிலைத்திருக்கும் என்றும் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி கூறியுள்ளார்.

Hamid-Karzai-Attends-Three-way-Summit-in-Iran

“எனது எண்ணங்கள் முழுவதும் தற்போது அந்த முன்மாதிரித் தலைவரின் குடும்பத்தார் மற்றும் சிங்கப்பூர் மக்களுடன் இருக்கிறது,” என்று அஷ்ரப் கனி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா

“லீ குவான் யூ நமது வட்டாரத்தின் பிரமாண்டம்,” என்று ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட் புகழாரம் செலுத்தியுள்ளார்.

Tony Abbott

முன்னாள் பிரதமர் கெவின் ரூட் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஆசியாவில் மட்டுமல்லாது உலக அளவிலும், லீ குவான் யூ மிக அரிய ராஜதந்திரி என்று தெரிவித்துள்ளார்.