Home நாடு ஷியாரியா நீதிமன்றத்தில் அன்வார் இப்ராகிம்: கடும் காவலுடன் அழைத்து வரப்பட்டார்!

ஷியாரியா நீதிமன்றத்தில் அன்வார் இப்ராகிம்: கடும் காவலுடன் அழைத்து வரப்பட்டார்!

646
0
SHARE
Ad

Anwarகோலாலம்பூர், மார்ச் 24 – ஓரினப்புணர்ச்சி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக சுங்கை பூலோ சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று கடும் காவலுடன் கோலாலம்பூர் சியாரியா மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

தனது முன்னாள் உதவியாளர் சைபுல் புகாரி அஸ்லானுக்கு எதிராக அன்வார் தாக்கல் செய்திருந்த குற்றவியல் அவதூறு மனுவில் (qazaf), பிரதமர் துறை அமைச்சர் ஜமீர் கீர் பஹாரோம் மற்றும் இன்னும் இருவரின் சார்பாக வழக்கறிஞர் சைனுல் ரிஜால் அபு பக்கார் பிரதிநிதிப்பதில் இருந்து பின்வாங்கிக் கொள்வது, ஏற்றுக்கொள்ளப்படுமா என்ற முடிவை வரும் ஏப்ரல் 27-ம் தேதி அறிவிப்பதாக, சியாரியா மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சியாரியா நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் கொண்ட கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய விவகாரங்களின் குழுவில் சைனுல் ரிஜாலும் உறுப்பினர் என்பதால், இந்த வழக்கில் ஜமீர் கீர் பஹாரோமை பிரதிநிதித்து சைனுல் ஆஜராவதற்கு எதிராக அன்வார் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

#TamilSchoolmychoice

இன்று, சைனுல் ரிஜால் இந்த வழக்கில் தான் ஜமீர் கீர் பஹாரோமை பிரதிநிதிக்கவில்லை என்ற தனது மனுவை நீதிமன்றத்தில் அளித்தார்.