Home நாடு “சீர்திருத்தம்” – ஷியாரியா நீதிமன்றத்தில் அன்வாரின் 3 வயது பேரன் கோஷம்!

“சீர்திருத்தம்” – ஷியாரியா நீதிமன்றத்தில் அன்வாரின் 3 வயது பேரன் கோஷம்!

445
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 24 – ஓரினப்புணர்ச்சி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக சுங்கை பூலோ சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று கடும் காவலுடன் கோலாலம்பூர் ஷியாரியா மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

வழக்கமாக நீதிமன்றத்திற்கு அன்வார் வரும் பொழுது ‘சீர்திருத்தம் வேண்டும் – Reformasi’ என்ற கோஷங்கள் எழுப்பப்படுவது வழக்கம். இன்றும் அதே போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆனால் அக்கோஷங்களை எழுப்பியவர்களில் அன்வாரின் மூன்று வயது பேரனும் ஒருவன்.

anwar 1

#TamilSchoolmychoice

(படம்: அன்வார் இப்ராகிம் பேஸ்புக்)

நூருல் நூகாவின் மகன் என நம்பப்படும் அச்சிறுவன் தனது தாத்தா அன்வாரை, காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் பொழுது, தொடர்ந்து,‘Reformasi’, ‘Lawan tetap Lawan’ என அழுது கொண்டே கோஷம் எழுப்பியுள்ளார். அதனைக் கண்ட அன்வார், மகிழ்ச்சியில் தனது பேரனை ஆரத்தழுவிக் கொண்டதாகக் கூறப்படுகின்றது.

பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே 10 சிறை அதிகாரிகளின் பாதுகாப்போடு வந்த அன்வார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “குரானை இரண்டு முறை படித்துவிட்டேன். தொடர்ந்து வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும் பெர்ட்ராண்ட்ருசெல்சின் ‘எ ஹிஸ்டரி ஆஃப் வெஸ்டர்ன் ஃபிலாசபி’ என்ற நூலைப் படித்து வருகின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

அன்வார் இன்னும் அதே துடிப்புடன் தனது மனைவி வான் அசிசா வான் இஸ்மாயில் மற்றும் குடும்பத்தினருடன் சுமார் 10 நிமிடங்கள் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.