Home இந்தியா கிரிக்கெட்: தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து!

கிரிக்கெட்: தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து!

454
0
SHARE
Ad

daniel-vettori-new-zealandஈடன், மார்ச் 24 – உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை  4 விக்கெட்டு வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நியூசிலாந்து அணி.

உலக்கோப்பை போட்டியின் முதலாவது அரையிறுதிப் போட்டி ஈடன் மைதானத்தில் நியூசிலாந்து – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

Luke+Ronchi+New+Zealand+v+South+Africa+71YrgXHw_Fslஅதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு தொடக்கமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. இந்நிலையில் ஆட்டத்தில் மழை குறிக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டதோடு, ஆட்டம் 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

43 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் குவித்தது. பின்னர் டக்வர்த் முறையில் நியூசிலாந்து அணி 43 ஓவர்களில் 298 ரன்கள் எடுத்தால் வெற்றி என நிர்ணயிக்கப்பட்டது.

CRICKET - NZL - SAFபின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 42.5 ஓவர்களில் 299 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது. அதிகபட்சமாக நியூசிலாந்த அணியின் எல்டர் 84 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்றார்.