Home உலகம் 148 பேருடன் ஜெர்மன் விங்ஸ் விமானம் விபத்து!

148 பேருடன் ஜெர்மன் விங்ஸ் விமானம் விபத்து!

544
0
SHARE
Ad

ACCIDENT24315eபாரீஸ், மார்ச் 24 – பிரான்ஸ் நாட்டில் தெற்கு ஆல்ப்ஸ் மலையில் 142 பயணிகளுடன் சென்ற லூப்தான்சா ஜெர்மன் விங்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த குறைந்த கட்டண விமானம் ஏ320 இன்று விபத்திற்குள்ளானது.

ஸ்பெயினின் பார்சிலோனாவில் இருந்து ஜெர்மனியின் டஸ்செல்டார்ப் சென்ற போது, விமானம் தெற்கு ஆல்ப்ஸ் மலையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 142 பயணிகள் , 2 பைலட்டுகள் 4 விமான நிறுவன ஊழியர்கள் ஆகியோரின் நிலைமை குறித்து உறுதியான தகவல் இல்லை. விமானத்தில் ஜெர்மனியர்கள் அதிகம் இருந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.