Home Photo News லீ குவான் இயூ மறைவு: உலகத் தலைவர்கள் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டு அஞ்சலி (படத்தொகுப்பு)

லீ குவான் இயூ மறைவு: உலகத் தலைவர்கள் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டு அஞ்சலி (படத்தொகுப்பு)

1267
0
SHARE
Ad

சிங்கப்பூர், மார்ச் 25 – மறைந்த சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவிற்கு உலகத்தலைவர்கள் பலர், அந்தந்த நாட்டில் அமைந்திருக்கும் சிங்கப்பூர் தூதரகத்திற்கு சென்று இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டு தங்களது அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Lee 4 (மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், கோலாலம்பூரில் அமைந்திருக்கும் சிங்கப்பூர் தூதரகத்தில் வைக்கப்பட்டிருக்கும் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.)

Lee 3

#TamilSchoolmychoice

(தென்கொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் யங் பியங் சே, சியோலில் அமைந்திருக்கும் சிங்கப்பூர் தூதரகத்தில் வைக்கப்பட்டிருக்கும் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.)

????????????????????????????

(அமெரிக்க பொதுச்செயலாளர் பான் கீ மூன், நியூயார்க்கில் அமைந்திருக்கும் சிங்கப்பூர் தூதரகத்தில் வைக்கப்பட்டிருக்கும் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.)

Lee 2

(ஜப்பான் பிரதமர் சின்ஸோ அபே, டோக்கியோவில் அமைந்திருக்கும் சிங்கப்பூர் தூதரகத்தில் வைக்கப்பட்டிருக்கும் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.)

??????????????????????????????????

(சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன், சிங்கப்பூர் இஸ்தானா அதிபர் மாளிகையில் வைக்கப்பட்டிருக்கும் லீ குவான் இயூ நல்லுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.)

????????????????????????????

(சிங்கப்பூரின் நடப்பு அதிபர் டோனி டான் கெங், தனது மனைவியுடன் சிங்கப்பூர் நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்பட்டிருக்கும் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.)

மறைந்த சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு லீ குவான் இயூவின் இறுதிச் சடங்கில் உலகத் தலைவர்கள் பலர் பங்கேற்கவுள்ளனர்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் கலாசார மண்டபத்தில் நிகழும் இச்சடங்கில் நேரடியாகக் கலந்துகொள்ள உலகத் தலைவர்கள் தங்களது பயணத்தை உறுதிசெய்து வருகின்றனர்.

படங்கள்: EPA