யாழ்பாணம், மார்ச் 25 – ராஜபக்சே ஆட்சியில் இலங்கை ராணுவத்தால் யாழ்ப்பாணத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட 430 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டு தமிழர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பேசிய அதிபர் சிறிசேனா; “வடக்கு, கிழக்கு மாகாணங்களில், போரில் அழிந்த வழிபாட்டுத் தலங்களை மீண்டும் கட்டமைக்கும் திட்டத்தை அரசு மேற்கொண்டு வருகிறது. விரைவில் அப்பணிகள் முடிந்து ஒப்படைக்கப்படும்.
இலங்கையில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலையே என வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் ரணில் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். இதனையடுத்து நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமரும் ரணிலும், முதல்வர் விக்னேஸ்வரனும் ஒருவரை ஒருவர் கண்டுகொள்ளாமல் இருந்தனர்.