இந்த படத்தின் தொடர்ச்சியாக வந்த படங்களிலும் அதிவேகமாக காரை ஓட்டி ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தினார் பவுல் வாக்கர். இவர் 2013-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த கார் விபத்தில் பலியாகி பல ரசிகர்களை ஆழ்ந்த சோகத்திலும் ஆழ்த்தினார். அவரது சக நடிகரும், உயிர் நண்பருமான ‘வின் டீசல்’ பவுலின் மரணத்திற்கு பல மேடைகளில் அஞ்சலி செலுத்தி இருந்தார்.
தற்போது, விரைவில் திரைக்கு வர உள்ளது ‘பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்’, திரைப்பட வரிசையின் 7-வது பாகமான ‘ப்யூரியஸ் 7’ திரையிடல் விழாவில் தன் மகளுக்கு ‘பவுலின்’ என்று பெயர் வைத்திருப்பதாக தெரிவித்து, தன் ஆருயிர் நண்பன் பவுலுக்கு தனது நினைவுகளால் அஞ்சலி செலுத்தினார்.
“திரைப்படத்தில் இருப்பது போன்றே உண்மையான வாழ்க்கையிலும் அவனுக்கும் எனக்குமான உறவு அன்பால் நிறைந்தது. ஒரு கொடூரமான கார் விபத்தினால், நான் என் சிறந்த நண்பனை, என் சகோதரனை இழந்து விட்டேன்” என்று சொன்னபடி, உணர்ச்சிவசப்பட்டு மேடையில் நின்றார் வின் டீசல்.
பொதுவாகவே தனது அந்தரங்க விஷயங்கள் பற்றி அதிகம் பகிர்ந்து கொள்ளாத வின் டீசல் கடந்த மார்ச் 16-ராம் தேதி தனக்கும் தனது நீண்ட நாள் பெண் தோழி பலோமா ஜிமனேசுக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளதாக பேஸ்புக்கில் தெரிவித்தார். இவர்களுக்கு ரிலே மற்றும் வின்செண்ட் சின்க்ளேர் என்று இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.