Home வாழ் நலம் பேரீச்சை பழத்தில் உள்ள சத்துக்கள்

பேரீச்சை பழத்தில் உள்ள சத்துக்கள்

610
0
SHARE
Ad

pericha-palmகோலாலம்பூர், மார்ச்.4- அத்தியாவசியமான சத்துப் பொருட்கள் பொதிந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம்.

அந்த அளவுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துப் பொருட்கள் இதில் நிறைந்துள்ளன.

சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொரு வரும் அவசியம் பேரீச்சைக் கனி உண்ண வேண்டும்.

#TamilSchoolmychoice

பேரீச்சையின் சத்துப்பட்டியல்… 

பேரீச்சை, எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து கொண்டது. குடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரீச்சைக்கு உண்டு.

பெருங்குடற் பகுதியில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பேரீச்சை பங்கெடுக்கிறது.

‘டேனின்ஸ்’ எனும் நோய் எதிர்ப்பு பொருள் பேரீச்சையில் உள்ளது. நோய்த் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படக்கூடியது டேனின்ஸ்.

‘வைட்டமின் ஏ’, பேரீச்சையில் ஏராளமான அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும், குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமானது.

சிறந்த நோய் எதிர்ப்புப்  பொருட்களான லுடின், ஸி-சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை உடல் அணுக்களை காப்பதோடு, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல் எனப்படும் ரசாயனங்களை விரட்டுவதிலும் பங்கெடுக்கிறது. குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக் கூடியது.

பேரீச்சை இரும்புச் சத்தை ஏராளமாக அள்ளி வழங்கும். 100 கிராம் பேரீச்சையில் 0.90 மில்லிகிராம் இரும்பு உள்ளது. இரும்புத் தாது, ரத்தத்திற்கு சிவப்பு நிறம் வழங்கும் ஹிமோகுளோபின் உருவாக்கத்தில் பங்கு வகிப்பதாகும். இது ரத்தம் பிராணவாயுவை சுமந்து செல்லும் அளவை தீர்மானிப்பதிலும் பங்கெடுக்கிறது.

பொட்டாசியம் தாது குறிப்பிட்ட அளவில் உள்ளது. உடலுக்குத் தேவையான மின்னாற்றலை வழங்கும் தாதுவாக பயன்படுகிறது. உடல் அணுக்களும், உடலும் வழவழப்புடன் இருக்கவும் பொட்டாசியம் அவசியம். இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதிலும் இது பங்கு வகிக்கிறது. பக்கவாதம், இதய வியாதிகள் ஏற்படாமலும் காக்கிறது.

கால்சியம், மாங்கனீசு, தாமிரம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் பேரீச்சம் பழங்களில் உள்ளன. கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களின் பலத்திற்கு அவசியம். நாடித் துடிப்பை சீராக்குதல் மற்றும் ரத்தக் கட்டி ஏற்படுவதை தடுத்தல் ஆகியவற்றிலும் பங்கு வகிக்கிறது. ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியில் தாமிரம் பங்கு வகிக்கிறது. மக்னீசியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

இத்தனை நல்ல சத்துக்கள் நிறைந்த பேரீச்சை பழங்கள் சுலபமாகவும், குறைந்த விலைகளிலும் கிடைப்பதால் அவற்றை நம் உணவில் தினமும் சேர்த்து வருவது நமது உடலுக்கு பலத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.