Home நாடு ஹூடுட் சட்டதிருத்தம்: “முதலில் கவனியுங்கள் – அவசரப்பட்டு விமர்சிக்காதீர்கள்” – ஹாடி கூறுகிறார்

ஹூடுட் சட்டதிருத்தம்: “முதலில் கவனியுங்கள் – அவசரப்பட்டு விமர்சிக்காதீர்கள்” – ஹாடி கூறுகிறார்

621
0
SHARE
Ad

Hadi Awang.கோலாலம்பூர், மார்ச் 26 – “ஹூடுட் சட்ட திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் என்ன பேசுகிறேன் என்பதை கவனித்துவிட்டு, பிறகு அதைப் பற்றி கருத்து கூறுங்கள். எதையும் முழுவதுமாக கவனிக்காமல் ஒரு முடிவுக்கு வராதீர்கள்” என்று பாஸ் தலைவர் ஹாடி அவாங் தன்னைப் பற்றி விமர்சிப்பவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தனிப்பட்ட உறுப்பினர்களின் தீர்மானங்களை பாஸ் கட்சி தாக்கல் செய்திருப்பது, ஹூடுட் தீர்மானம் அல்ல என்றும், ஆனால் ஷியாரியா நீதிமன்றத்தில் செய்யப்பட்ட இஸ்லாமியர்களுக்கும் மட்டுமே பொருந்தும் சட்டதிருத்தங்கள் அங்கு பரிந்துரைக்கப்படும் என்றும் ஹாடி அவாங் கூறியுள்ளார்.

இது குறித்து ஹாடி அவாங் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் கடிதத்தில், “ஹூடுட் சட்டதிருத்த விவகாரம் குழப்பிக் கொள்ளப்படுகின்றது” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“நாம் அனைவரும் அறிவுடையவர்கள், படித்தவர்கள் மற்றும் முதிர்ச்சியுள்ளவர்கள். அதனால் முதலில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்” என்றும் ஹாடி அவாங் குறிப்பிட்டுள்ளார்.

கிளந்தான் ஷியாரியா குற்றவியல் சட்டம் (11)-ஐ பாஸ் உருவாக்கி 20 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், மக்களுக்கு ஷியாரியா சட்டங்கள் குறித்து கற்பிக்க கட்சி முயற்சி செய்கின்றது என்றும் ஹாடி தெரிவித்துள்ளார்.

கிளந்தான் மாநிலத்தில் ஹூடுட் சட்டத்தை அமல்படுத்தும் வகையில், ஷியாரியா குற்றவியல் சட்டம் 2 (1993)-ல் சட்ட திருத்தம் கொண்டு வரும் சட்டவரைவை அம்மாநில மந்திரி பெசார் டத்தோ அகமட் யாகோப் கடந்த வாரம் சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.