Home தொழில் நுட்பம் மருத்துவ அறுவை சிகிச்சையில் ரோபோக்கள் – கூகுள் புதிய முயற்சி!

மருத்துவ அறுவை சிகிச்சையில் ரோபோக்கள் – கூகுள் புதிய முயற்சி!

565
0
SHARE
Ad

403கோலாலம்பூர், மார்ச் 28 – மருத்துவ அறுவை சிகிச்சையில் ரோபோக்கள் என்றவுடன் இனி ரோபோக்கள் தான் மனிதர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் என்ற எண்ணத்திற்கு வந்துவிட வேண்டாம். அத்தகைய நிகழ்வுகள் வருங்காலத்தில் சாத்தியம் தான் என்றாலும்,

தற்போதய நிலையில், கூகுள் அமெரிக்காவில் மருத்துவ துறையில் புகழ்பெற்ற ‘ஜான்சன் அன்ட் ஜான்சன்’ (Johnson & Johnson) நிறுவனத்துடன் இணைந்து மருத்துவ அறுவை சிகிச்சையில் மருத்துவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய புதிய அறிவுசார் எந்திரங்களை உருவாக்க முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக இரு நிறுவனங்களும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “அறுவை சிகிச்சை அறையில் ரோபோக்களின் உதவிகளை மேம்படுத்த புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளோம். இந்த புதிய சூழலை உருவாக்குவதன் முக்கிய நோக்கம் மேம்படுத்தப்பட்ட துல்லியமான மருத்துவ சிகிச்சைகளை நோயாளிகளுக்கு வழங்குவது தான்”

#TamilSchoolmychoice

“ரோபோக்கள் நிறைந்த அறுவை சிகிச்சை அறை, பாதுகாப்பான மருத்துவ சூழலை உருவாக்கும். மேலும், எந்தவொரு கவனக்குறைவான செயல்கள்களுக்கும் இடமளிக்காது” என்று அறிவித்துள்ளன.

கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக அறிவுசார் எந்திரங்கள் மருத்துவத்துறையின் முக்கிய அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தாலும், கூகுள் மற்றும் ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனங்களின் இந்த புதிய முயற்சி மருத்துவத் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஜான்சன் அன்ட் ஜான்சன் மையத்தின் அறுவை சிகிச்சை பிரிவின் தலைவர் கேரே ப்ரூடேன் கூறுகையில், “மருத்துவ துறையில் இரு நிறுவனங்களின் இந்த புதிய முயற்சி முக்கிய மைல்கல்லாக அமையும்.

மருத்துவமும் தொழில்நுட்பமும் இணைந்து உருவாக்க இருக்கும் இந்த முயற்சி ஒரு சிறந்த அறிவியல் சூழலை கொடுக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.