Home இந்தியா இந்தியர்களுக்கு வாஜ்பாய் உத்வேகம் அளிக்க கூடியவராக இருப்பார் – மோடி

இந்தியர்களுக்கு வாஜ்பாய் உத்வேகம் அளிக்க கூடியவராக இருப்பார் – மோடி

789
0
SHARE
Ad

vajpayee_2355191gபுதுடெல்லி, மார்ச் 28 – முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வீட்டுக்கு நேரில் சென்று, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பாரத ரத்னா விருதை வழங்கினார். உடல்நலம் சரியில்லாததால் வாஜ்பாய் வீட்டுக்கே வந்து பிரணாப் முகர்ஜி விருதை வழங்கினார்.

டெல்லியில் வாஜ்பாய் வீட்டில் நடந்த இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் நேரில் சென்று வாஜ்பாய்க்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அடல் பிஹாரி வாஜ்பாக்கு பாரத ரத்னா விருது வழங்கிய அதிபருக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும் மோடி கூறியதாவது;

#TamilSchoolmychoice

“நாம் நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த வாஜ்பாயிக்கு பாரத ரத்னா விருது வழங்க ஒரு வாய்ப்பு கிடைத்தது நினைத்து பெருமை கொள்ளவேண்டும்.”

vajpayee_modi_110414“என்னை போன்ற பல இந்தியர்களுக்கு வாஜ்பாய் உத்வேகம் அளிக்க கூடியவராக இருப்பார். வாஜ்பாயின் வாழ்க்கை நம்மை தொடர்ந்து  ஊக்குவிக்கவும் மற்றும் வழிகாட்டவும் அந்த இறைவனை பிரார்த்திக்கிறோம்” என்று மோடி கூறினார்.

6 ஆண்டுகள் பிரதமராக இருந்த வாஜ்பாய் 1924-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி பிறந்தவர். 5 ஆண்டுகள் பதவிக் காலத்தை நிறைவு செய்த காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் வாஜ்பாய் என்ற பெருமைக்குரியவர் ஆவார்.

கட்சி வரம்புகளை கடந்து எல்லோராலும் மதிக்கப்படும் தலைவர் அடல்பிகாரி வாஜ்பாய் ஆவார். 1998 மே மாதம் ராஜஸ்தானில் அணுகுண்டு சோதனை வாஜ்பாய் ஆட்சியில் தான் நடந்தது. மேலும் போக்ரனில் 5 குண்டுகளை வெடிக்கச் செய்து இந்தியா அணுஆயுத நாடு என்பதை வாஜ்பாய் அறிவித்தார்.

நவாஸ் ஷெரீப் வாழ்த்து: பாரத ரத்னா விருது பெற்ற முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.