Home உலகம் விண்வெளி ஆராய்ச்சி – நாசாவுடன் ரஷ்யா இணையும் திட்டம் நிறைவேறுமா?

விண்வெளி ஆராய்ச்சி – நாசாவுடன் ரஷ்யா இணையும் திட்டம் நிறைவேறுமா?

539
0
SHARE
Ad

nasaமாஸ்கோ, மார்ச் 30 – அமெரிக்காவுடன் கைகோர்க்கிறது ரஷ்யா. இந்த நிகழ்வு அனைவருக்கும் ஆச்சரியத்தை தந்தாலும், அது உண்மை தான். ஆனால், ரஷ்யா-அமெரிக்கா இணைய இருப்பது அரசியல் காரணங்களுக்காக அல்ல, அறிவியல் காரணங்களுக்காக.

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவுடன் இணைந்து புதிய விண்வெளி நிலையம் கட்ட ரஷ்யா திட்டமிட்டுள்ளது. தற்போது அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து அனைத்துலக விண்வெளி நிலையம் ஒன்றை விண்வெளியில் அமைத்து வருகின்றன.

அந்த நிலையத்தின் கட்டுமான பணிக்கு பொருட்கள் ராக்கெட் மூலம் அனுப்பப்படுகின்றன. விண்வெளி வீரர்கள் அவ்வபோது ஆய்விற்கு சென்று வருகின்றனர். இந்த விண்வெளி ஆய்வகம் வருகிற 2024–ம் ஆண்டு வரை மட்டுமே செயல்படும்.

#TamilSchoolmychoice

எனவே, எதிர்காலத்தில் புதிய விண்வெளி நிலையம் அமைக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

எனினும், அமெரிக்கா – ரஷ்யா இடையே உக்ரைன் விவகாரத்தில் நடைபெற்று வரும் பனிப் போர் காரணமாக இந்த திட்டம் நிறைவேறுமா என்பது சந்தேகமே.