Home நாடு தித்திவாங்சா மோனோரயிலில் தீ!

தித்திவாங்சா மோனோரயிலில் தீ!

661
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 30 – தித்திவாங்சா மோனோரயில் நிலையத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இரயில் சக்கரங்களில் தீ பிடித்ததையடுத்து, கோலாலம்பூர் தீயணைப்பு நிலையத்தின் தலைமை அதிகாரிக்கு காலை 8.52 மணியளவில் தகவல் கிடைத்துள்ளது. அடுத்த 5 நிமிடங்களில் சம்பவ இடத்தை தீயணைப்பு வீரர்கள் அடைந்துள்ளனர்.

11084157_10152681349506746_3412080131030958637_o

#TamilSchoolmychoice

பின்னர், பயணிகளை இரயில் நிலையத்தில் இருந்து வெளியேற்றிய தீயணைப்பு வீரர்கள், எரியும் இரயிலை, அதன் நிலையத்தில் இருந்து சற்று தள்ளி நிறுத்துமாறு ஓட்டுநருக்கு உத்தரவிட்டதுடன், உடனடியாக தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இச்சம்பவத்தில் பயணிகளுக்கு காயம் ஏற்பட்டதா என்பது குறித்து இன்னும் முழு விபரங்கள் வெளிவரவில்லை.

இந்நிலையில், தற்காலிகமாக மோனோரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.