Home இந்தியா 2015-ன் இந்திய அழகியாக டெல்லியின் “அதிதி ஆர்யா” தேர்வு!

2015-ன் இந்திய அழகியாக டெல்லியின் “அதிதி ஆர்யா” தேர்வு!

780
0
SHARE
Ad

miss indiaபுதுடெல்லி, மார்ச் 30 – 2015-ஆம் ஆண்டிற்கான இந்திய அழகியாக டெல்லியைச் சேர்ந்த ‘அதிதி ஆர்யா’ என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாடு முழுவதும் 13 நகரங்களில் நடைபெற்ற இந்திய அழகிக்கான தேர்வில் 21 அழகிகள் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

மும்பை ‘யஷ்ராஜ் ஸ்டூடியோ’வில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கில் பல்வேறு பிரிவுகளில் இறுதி போட்டிகள் நடந்தது. மும்பையில் நடைபெற்ற இறுதி போட்டிக்கு 5 பேர் அழைக்கப்பட்டனர்.

பின்னர் முதல் மூன்று இடங்களுக்கான அழகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். போட்டியின் முடிவில் ‘அதிதி ஆர்யா’ முதலிடத்தையும், ஆப்ரி்க்ரச்சேல் வாஸ் 2-ஆம் இடத்தையும், வர்டிகாசிங் 3-ஆம் இடத்தையும் பிடித்தனர்.

#TamilSchoolmychoice

உலக அழகிப்போட்டிக்கான தேர்வின் போது இந்தியா சார்பில் அதிதி ஆர்யா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடுவர்களாக பாலிவுட் நடிகர்கள் ஜான் ஆபிரகாம், அனில்கபூர், நடிகைகள் மனிஷா கொய்ராலா, ஷில்பா ஷெட்டி, சோனாலி பிந்த்ரே ஆகியோர் இருந்து முதல் 3 இடம் பிடித்த அழகிகளை தேர்வு செய்தனர்.

நடிகை ஜாக்குலியின் பெர்னான்டஸ், நடிகர் ஷாகித் கபூர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். அதிதி ஆர்யா டெல்லியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஆராய்ச்சி பகுப்பாளராக பணிபுரிகிறார். இங்கு பணியில் இருந்து கொண்டே அழகி போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.