சிங்கப்பூர், மார்ச் 30 – சிங்கப்பூர் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கு இஸ்ரேல் நாட்டு அதிபர் ரிவன் ரிவ்லினைச் சந்தித்து இருதரப்பு உறவுகளை எதிர்காலத்தில் சிறப்பாக முன்னெடுத்துச் செல்வது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பு சிறிது நேரமே இருந்தது. அப்போது, இஸ்ரேலுக்கு வருகை தர பிரதமர் மோடிக்கு அதிபர் ரிவ்லின் அழைப்பு விடுத்தார். இது குறித்து, வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் செயின் அக்பரூதீன் கூறுகையில்,
“இஸ்ரேலுக்கு வருகை தர பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் ரிவ்லின், மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகுவும் அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால், பிரதமர் மோடியின் பயணம் குறித்து இருதரப்பு அதிகாரிகளும் முடிவெடுப்பார்கள்”.
“சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பிரதமர் நெடன்யாகுவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்” என வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் செயின் அக்பரூதீன் கூறினார்.