Home உலகம் ஏர் கனடா விமானம் தரையிறங்கும் போது விபத்து – 23 பயணிகள் காயம்

ஏர் கனடா விமானம் தரையிறங்கும் போது விபத்து – 23 பயணிகள் காயம்

648
0
SHARE
Ad

??????????????????நோவா ஸ்காட்டியா, மார்ச் 30 – கனடாவில் நேற்று நிலவிய கடும் பனிமூட்டமும், மோசமான வானிலையும் காரணமாக ஏர் கனடா விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகி மின்சார கம்பிகளில் மோதி விபத்திற்குள்ளானது. இவ்விபத்தில் 23 பேர் காயமடைந்தனர்.

படுகாயமடைந்த இரு பயணிகள் அவசர சிகிக்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், மற்ற அனைவருக்கும் சிராய்ப்பு மற்றும் சிறிய அளவிலான காயம் ஏற்பட்டுள்ளதாக ஹாலிபாக்ஸ் விமான நிலைய செய்தி தொடர்பாளர் பீட்டர் ஸ்பர்வே கூறியுள்ளார். இவ்விமானத்தில் 5 பணியாளர்களும், 133 பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.

விமானம் விபத்துக்குள்ளானவுடன் அதிலிருந்து வெளியேறிய பயணிகள் அனைவரும் ஒரு மணி நேரம் கடும் மூடுபனியில் சிக்கி தவித்துள்ளனர். விபத்து நிகழ்ந்தவுடன் அதன் என்ஜினிலிருந்து எரிபொருள் கசிந்ததால், பயந்துபோன பயணிகள் அனைவரும், பணியை பொருட்படுத்தாமல் விமானத்திலிருந்து வெளியேறி உள்ளனர்.

#TamilSchoolmychoice

??????????????????

விபத்து நடந்த நேரத்தில் விமான நிலையத்தில் மின்சாரம் தடைபட்டிருந்தது என்றும், விமானம் தரையிறங்கும் போது மின்சார வயர்கள் மீது அதன் இறக்கை உராய்ந்ததாகவும் கூறப்படுகின்றது.

இதையடுத்து விமான நிலையத்தின் 2 ஓடுபாதைகளும் உடனடியாக மூடப்பட்டன. அதில் ஒரு ஓடுபாதை மட்டும் காலை 6 மணியளவில் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஜெர்மன்விங்ஸ் பயணிகள் விமானம் ஆல்ப்ஸ் மலையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில், நேற்று மீண்டும் ஒரு விமான விபத்து நேர்ந்துள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.