Home உலகம் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் மருத்துவருக்கு அனைத்துலக பியென்னல் விருது!

இந்திய வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் மருத்துவருக்கு அனைத்துலக பியென்னல் விருது!

541
0
SHARE
Ad

subadraசிங்கப்பூர், ஏப்ரல் 2 – இந்திய வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் மருத்துவருக்கு, மருத்துவ சேவைக்கான அனைத்துலக விருது வழங்கப்பட உள்ளது. இந்திய வம்சாவளியை  சேர்ந்தவர் சுப்ரதா தேவி ராய்.

சிங்கப்பூரில், மருத்துவராக பணிபுரிந்து வரும் இவர், பல்வேறு சேவை முகாம்களில் பங்கேற்றுள்ளார். சிங்கப்பூர் நன்யாங் நர்சிங்  கல்லூரியில், விரிவுரையாளராகவும் இவர் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், அவருடைய மருத்துவ சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக, புளோரன்ஸ்  நைட்டிங்கேல் அனைத்துலக நிறுவனம் அவருக்கு பியென்னல் விருதை அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

பெண்கள் மற்றும் அகதிகளின் நலனில் அக்கறை மற்றும் அவர்களுக்கு  ஆற்றிய சேவை ஆகியவற்றின் காரணமாக, இந்த விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

தென் கொரிய தலைநகர் சியோலில், ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநாட்டில், அவருக்கு இந்த விருது வழங்கப்படும். இது குறித்து, சுப்ரதா கூறுகையில்,

“பியென்னல் விருதுக்கு நான் தேர்வு செய்யப்பட்டு இருப்பது எனக்கு கவுரவமாக உள்ளது. பெண்கள் மற்றும் அகதிகள் நலனுக்காக சேவை செய்பவர்களுக்கு, இந்த  விருது ஊக்கத்தை அளிக்கும்” என்றார்.

கடந்த 1999-ல் இருந்து பியென்னல் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை பெறக்கூடிய முதல் சிங்கப்பூர் பிரஜை  சுப்ரதா ராய் என்பது குறிப்பிடத்தக்கது.