Home இந்தியா ஏமனில் இருந்து மும்பை திரும்பிய 349 இந்தியர்களுக்கு கண்ணீர் மல்க வரவேற்பு!

ஏமனில் இருந்து மும்பை திரும்பிய 349 இந்தியர்களுக்கு கண்ணீர் மல்க வரவேற்பு!

518
0
SHARE
Ad

indians-yemen-djibouti.jpg.image.784.410புதுடெல்லி, ஏப்ரல் 2 – உள்நாட்டு போர் காரணமாக அமைதி எழுந்த ஏமனில் இருந்து தமிழர்கள் உள்ளிட்ட ஏராளமான இந்தியர்கள் கொச்சின் திரும்பினர். கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள ஏமன் நாட்டில் 4 ஆயிரம் இந்தியர்களை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்திய கடற்படையினர் 349 இந்தியர்களை பத்திரமாக மீட்டனர். இவர்களில் 40 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். ஏமனில் இருந்து ஐ.என்.எஸ்.சுமித்ரா கப்பல் மூலம் மீட்கப்பட்டு அவர்கள் ஜபோட்டிக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் கொச்சி சென்றடைந்தனர்.

ஏமனில் நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதாக மீட்கப்பட்ட இந்தியர்கள் தெரிவித்தனர். மும்பை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த இந்தியர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யபபட்டுள்ளது.

#TamilSchoolmychoice

indian+b+marமக்கள் கூடும் இடங்கள் பள்ளிகளில் குண்டு வீச்சு நடைபெறுவதால் ஏமனில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.  இதனிடையே கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள ஏமன் நாட்டின் மீது சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுபடையினர் தொடர்ந்து 7-வது நாளாக வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.