Home வாழ் நலம் சிறுநீரக கற்களை கரைக்கும் வெந்தயம்!

சிறுநீரக கற்களை கரைக்கும் வெந்தயம்!

1549
0
SHARE
Ad

venthaiyamவெந்தயத்தில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் நீணட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். இதனால் பசியெடுப்பது குறைகிறது. உணவு உட்கொள்ளும் அளவும் குறைவதால் உடல் எடை குறைய ஏதுவாகிறது.

வெந்தயம் சிறுநீரகக் கற்களைக் கரைக்க கூடியதும், கற்கள் வராமல் தடுக்க கூடியதும். சிறுநீரைப் பெருக்கி சிறுநீர் கற்கள் உருவாவதைத் தடுக்கிறது. 10 கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்து சிறிது சோம்பு சேர்த்து அதனோடு உப்பும் சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு, சீதபேதி ஆகியன குணமாகும்.

5 கிராம் வெந்தயத்தை வேக வைத்துக் கடைந்து எடுத்து அதோடு போதிய தேன் சேர்த்து கொடுக்க தாய்ப்பால் பெருகும்.  இரண்டு தேக்கரண்டி அளவு வெந்தயத்தை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்வதால் கெட்ட கொழுப்பு, சத்தான எல்.டி.எல் கொழுப்பு குறைந்துவிடும் என்று ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

#TamilSchoolmychoice

venthayam2வெந்தயத்தில் இருக்கும் அபரிமிதமான பொட்டாசியம் சத்து ரத்தத்தில் சேரும் உப்புசத்தை மாற்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. தீப்பட்ட புண்களின் மீது வெந்தயத்தை அரைத்து மேற்பூச்சாக பூசி வர விரைவில் புண்கள் ஆறும். வடுக்கள் தோன்றாது.

வெந்தயப்பொடியை லேசாக வறுத்து எடுத்து வைத்து கொண்டு இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும். வெந்தயத்தில் இவ்வளவு மருத்துவ குணங்கள் பொதிந்திருப்பதை மனதில் வைத்து மறவாமல் பயன்படுத்தி ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம்.