நைரோபி, ஏப்ரல் 2 – சோமாலிய நாட்டின் எல்லைக்கு அருகில் கரிசா நகரில் உள்ள கரிசா பல்கலைக்கழகத்தின் மீது சோமாலியாவின் இஸ்லாமிய பயங்கரவாதக் குழுவான அல்-சஹாப் நடத்திய தாக்குதலில் இதுவரை 15 உயிர்ப்பலியாகியிருப்பதோடு, 60 பேர் காயமும் அடைந்துள்ளனர்.
கரிசா பல்கலைக் கழகத்தைச் சுற்றிலும் குவிக்கப்பட்டிருக்கும் இராணுவத்தினர்…
கென்யாவின் தலைநகர் நைரோபியில் இருந்து வட கிழக்கு நோக்கி 370 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்றது இந்த கரிசா நகர் அமைந்துள்ளது.
பல்கலைக் கழகத்தின் உள்ளே பிணை பிடிக்கப்பட்டுள்ளவர்களில் பலர் தலை துண்டிக்கப்பட்டிருக்கின்றனர் என இந்தத் தாக்குதலில் இருந்து தப்பி வந்தவர்கள், மெய்சிலிர்க்கும் வகையில் விவரித்துள்ளனர்.
கிறிஸ்துவர்களை அடையாளம் கண்டு அவர்களை மட்டுமே குறிவைக்கும் தாக்குதலில் பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.
கரிசா பல்கலைக் கழகத்தின் முன்பு காவலில் ஈடுபட்டிருக்கும் கென்யா நாட்டு இராணுவத்தினர்…
படங்கள்: EPA