Home தொழில் நுட்பம் ஆபிஸ் லென்ஸ் செயலியை அண்டிரொய்டு, ஐஒஎஸ்-ல் அறிமுகப்படுத்திய மைக்ரோசாப்ட்!

ஆபிஸ் லென்ஸ் செயலியை அண்டிரொய்டு, ஐஒஎஸ்-ல் அறிமுகப்படுத்திய மைக்ரோசாப்ட்!

704
0
SHARE
Ad

officelensகோலாலம்பூர், ஏப்ரல் 4 – விண்டோஸ் தளங்களில் மட்டும் செயல்பட்டு வந்த ‘ஆபிஸ் லென்ஸ்’ (Office Lens) செயலி அண்டிரொய்டு, ஐஒஎஸ் தளங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆபிஸ் லென்ஸ் செயலி குறித்து மைக்ரோசாப்ட் தனித்த அறிவிப்பை வெளியிடக் காரணம், அந்த செயலி பயனர்கள் மத்தியில் பெரிய அளவில் கவனம் ஈர்க்கும் என்பதால் தான்.

ஒரு ஆவணத்தையோ அல்லது படக் கோப்பையோ ‘வேர்ட் முறைமை’ (Word Format)-க்கு வெறும் ஸ்கேனிங் மூலம் மாற்ற முடியும் என்பதே இந்த செயலியின் சிறப்பு அம்சம். அதாவது ஒரு ஆவணத்தை ஆபிஸ் பயன்பாட்டில் எடிட் செய்ய அதன் ‘மென் பிரதி’ (Soft Copy) அவசியம். ஆனால் இந்த செயலியில், தேவையான ஆவணத்தை கேமரா மூலம் புகைப்படம் எடுத்தால் போதுமானது. எடுக்கப்படும் படக் கோப்பை, வேர்ட் முறைமைக்கு இந்த செயலி மாற்றி விடும். அதன் மூலம் பயனர்கள் தேவையான ‘மாறுதல்’ (Edit)-களைச் செய்ய முடியும்.

ஐபோன்களில் இந்த செயலியை ஆப்பிள் அப் ஸ்டோர் மூலம் நேரடியாக பதிவிறக்கம் செய்யலாம்.

#TamilSchoolmychoice

அண்டிரொய்டு பயனர்கள் பதிவிறக்கத்திற்கு கீழ் காணும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்:

1. கூகுள்+ -ல் ‘ஆபிஸ் லென்ஸ் அண்டிரொய்டு பிரிவ்யூ’ (Office Lens Android Preview) டேப்பை தேர்வு செய்ய வேண்டும்.

2. பின்னர் அங்கு ‘ஜாயின் கம்யூனிட்டி’ (Join community) என்ற தேர்வை கிளிக் செய்து ‘பிக்கம் ஏ டெஸ்ட்டர்’ (Become a Tester) என்பதை தேர்வு செய்தால், ஆபிஸ் லென்ஸ் செயலியை பயன்படுத்தலாம்.

ஆபிஸ் லென்ஸ் செயலியின் முன்னோட்டத்தைக் கீழே காண்க: