Home உலகம் பாகிஸ்தான் – இலங்கை இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

பாகிஸ்தான் – இலங்கை இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

490
0
SHARE
Ad

sirisena-nawaz sharifஇஸ்லமபாத், ஏப்ரல் 7 – பாகிஸ்தான்- இலங்கை இடையே அணு சக்தித் துறையில் ஒத்துழைப்பு உள்ளிட்ட 6 ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை கையெழுத்தாகின. இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா, பாகிஸ்தானுக்கு 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை திங்கள்கிழமை அவர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு ஏற்படுத்துவது குறித்த ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டன.

பாகிஸ்தான் அணு சக்தி ஆணையம், இலங்கை அணு சக்தி ஆணையம் ஆகியவை இடையேயான ஒப்பந்தம் இவற்றில் குறிப்பிடும்படியானது. இந்தியாவுடன் இதே போன்ற ஒப்பந்தத்தில் இலங்கை இரு மாதங்களுக்கு முன்னர் கையெழுத்திட்ட நிலையில், தற்போது பாகிஸ்தானுடனும் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????மேலும், பாதுகாப்பு, வர்த்தகம், விளையாட்டு, பேரிடர் மீட்பு ஆகிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின என பாகிஸ்தான் வெளியுறவு துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.