Home கலை உலகம் ‘உத்தம வில்லன்’ படத்தை தடை செய்ய வேண்டும் – விசுவ இந்து அமைப்பினர் மனு!

‘உத்தம வில்லன்’ படத்தை தடை செய்ய வேண்டும் – விசுவ இந்து அமைப்பினர் மனு!

568
0
SHARE
Ad

kamal-uthama-villain-10-avatarசென்னை, ஏப்ரல் 7 – கமலஹாசன் நடித்து விரைவில் வெளிவரவுள்ள ‘உத்தம வில்லன்’ திரைப்படத்தில் இந்து மதம் குறித்து அவதூறு கருத்து இருப்பதால், அந்த திரைப்படம் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் சென்னை பெருநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தனர்.

இதுகுறித்து அந்த அமைப்பின் சென்னை மாநகர அமைப்பாளர் கே.எல். சத்தியமூர்த்தி, சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜிடம் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

“நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ‘உத்தம வில்லன்’ திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது. இந்த திரைப்படத்தில் இந்துகளின் கடவுளான பெருமாளை விமர்சிக்கப்பட்டுள்ளது. அந்த திரைப்படத்தின் பாடல்களில் பெருமாளின் அவதாரங்கள் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளன”.

#TamilSchoolmychoice

DE08-P4-CITY-3COL-_1231349f“இந்து மதத்தை எதிர்த்து தன்னை நாத்திகனாக காட்டிக் கொள்ளும் கமல்ஹாசன் நடித்துள்ள உத்தம வில்லன் வெளியே வந்தால், கோடிக்கணக்கான இந்துக்களின் மனங்கள் புண்படும். எனவே காவல்துறை அந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.