Home உலகம் இலங்கை போரில் கணவனை இழந்த தமிழ்ப் பெண் குடும்பங்களுக்கு நலவாரியம்!

இலங்கை போரில் கணவனை இழந்த தமிழ்ப் பெண் குடும்பங்களுக்கு நலவாரியம்!

655
0
SHARE
Ad

WIDOWSகொழும்பு, ஏப்ரல் 7 – இலங்கையில் நடந்த போரினால் கணவனை இழந்த பெண்களின் குடும்பங்களுக்கு என தனியாக தேசிய நலவாரியம் அமைக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

இலங்கை துணை அதிபர் ரனில் விக்ரமசிங்கே,  போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட கிழக்குப்  பகுதிக்குப்  பயணம் மேற்கொண்டு அங்கு மக்களைச்  சந்தித்தார். அப்போது அங்குள்ள தமிழர்கள் முன்வைத்த கோரிக்கையை அடுத்து இந்த அறிவிப்பை பிரதமர் அலுவலகம் வெளியிட்டு உள்ளது.

இந்த புதிய நலவாரியம் கிளிநொச்சியில் அமைய உள்ளது. மேலும் அந்த அறிக்கையில், “போரின் போது அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளும்தான். தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு பகுதியில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள், போரில் கணவனை இழந்த பெண்கள்”.

#TamilSchoolmychoice

“அவர்களின் குழந்தைகளுக்கு உணவு, உடை மற்றும் தரமான கல்வி போன்ற அடிப்படை தேவைகளை கூட தர முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள். அரசால் அளிக்கப்பட்ட 35 ஆயிரம் கடன் உதவி, அவர்களின் அன்றாட தேவைகளுக்கே செலவாகிவிடுகிறது”.

“வங்கிகளும் அவர்களுக்கு கடன் அளிப்பதில்லை. இப்போது அமைக்கப்படவிருக்கும் நலவாரியம் மூலம் அவர்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்” என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.