Home தமிழ் தொலைக்காட்சியில் தில்லானா மோகனாம்பாள் படத்தைப் பார்த்துவிட்டு ஆச்சியை சந்தித்த விவேக்!

தொலைக்காட்சியில் தில்லானா மோகனாம்பாள் படத்தைப் பார்த்துவிட்டு ஆச்சியை சந்தித்த விவேக்!

767
0
SHARE
Ad

vivekசென்னை, ஏப்ரல் 9 – தொலைக்காட்சி ஒன்றில் தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தை பார்த்துவிட்டு, ஆச்சி மனோரமாவை சந்தித்து ஆசி பெற்றுள்ளார் நடிகர் விவேக்.

டுவிட்டர் வலைதளத்தில் இணைந்திருக்கும் பெரும்பாலான தமிழ் நடிகர்களுள் சின்னக் கலைவாணர் விவேக்கும் ஒருவர். சமீபத்தில் அவர், தனது டுவிட்டர் வலைதளத்தில் ஆச்சி மனோரமாவிடம் ஆசி பெறும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். மேலும் அவர் அந்த பதிவில், “தொலைக்காட்சியில் தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தை பார்த்தேன். நமது அன்பிற்குரிய ஆச்சியின் நடிப்பு என்னை வியப்பில் ஆழ்த்தியது. உடனே அவர் வீட்டிற்கு சென்று ஆசி பெற்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

காலத்தால் அழிக்க முடியாத பல படங்களை இந்திய சினிமாவிற்கு கொடுத்துள்ள ஆச்சி மனோரமா, கடந்த சில நாட்களுக்கு முன்னர் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தன்னை யாரும் வந்து சந்திக்க வில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், விவேக் அவரை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.