Home அவசியம் படிக்க வேண்டியவை “அல்தான்துயா கொலையில் எனக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை” – நஜிப் பதில்

“அல்தான்துயா கொலையில் எனக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை” – நஜிப் பதில்

583
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 10 – டிவி3 தொலைக்காட்சியில் நேற்று இரவு நடைபெற்ற ‘அரசியல் மற்றும் பொருளாதாரம்’ என்ற தலைப்பிலான நேர்காணல் ஒன்றில் நஜிப் கலந்து கொண்டார்.

அதில்,முன்னாள் பிரதமர் மகாதீர் தனக்கு எதிராக கூறும் விமர்சனங்கள், ஜிஎஸ்டி விவகாரங்கள் குறித்து பேசிய நஜிப், அல்தான்துயா கொலை வழக்கு தொடர்பாகவும் பதிலளித்தார்.

Najib

#TamilSchoolmychoice

“அல்தான்துயாவை எனக்கு தெரியும் என்பதற்கான எந்த ஒரு ஆதாரங்களும் இல்லை. படங்களோ, கடிதங்களோ, நேரடி சாட்சியங்களோ எதுவும் கிடையாது. இதை கூட்டரசு நீதிமன்றம் வரை அனைத்து நீதிமன்றங்களும் உறுதிப்படுத்தியுள்ளன” என்று நஜிப் கூறினார்.

மேலும், “இது 2008-ம் ஆண்டு கதை. பழைய கதை. பெர்மாத்தாங் பாவிலுள்ள மசூதிக்குள் நுழையும் போது மூன்று முறை சத்தியம் செய்தேன். எனக்கு அல்தான்துயாவை தெரியாது. அவருடன் எந்த ஒரு நேரடியான, மறைமுகமான தொடர்பு எனக்கு கிடையாது என்று. அந்த சமயத்தில் துன் அப்துல்லா படாவி தலைமையில் நான் துணைப் பிரதமராக இருந்தேன். சட்டத்துறை தலைவரே நான் இந்த விவகாரத்தில் ஈடுபடவில்லை என நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.” என்றும் நஜிப் குறிப்பிட்டார்.

அதே வேளையில், அல்தான்துயா குறித்து மகாதீர் தன்னுடன் விவாதித்தார் என்று அவர் கூறிக்கொள்வதையும் நஜிப் மறுத்தார்.

“நாங்கள் இதைப் பற்றி ஒரு முறை பேசினோம். ஆனால் அந்த விவாதத்தில் என்னை அல்தான்துயா வழக்கில் தொடர்புபடுத்தி எந்த ஒரு கேள்வியையும் அவர் கேட்கவில்லை” என்றும் நஜிப் தெரிவித்தார்.