Home நாடு “உட்கட்சி பூசல்கள் தான் தேமு தோல்விக்கு வழி வகுக்கும்” – நஜிப்

“உட்கட்சி பூசல்கள் தான் தேமு தோல்விக்கு வழி வகுக்கும்” – நஜிப்

508
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 10 – தேசிய முன்னணி கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து ஒற்றுமையுடன் இருந்தால் அடுத்த பொதுத்தேர்தலிலும் நிச்சயமாக வெற்றியை தொடரலாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்றைய டிவி3 நேர்காணலில் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

Najib

“நாம் ஒற்றுமையுடன் இருந்தால், நமக்குள் எந்த ஒரு சண்டையோ, சதியோ இல்லையென்றால், நான் உறுதியாகக் கூறுகின்றேன். ‘இன்ஷா அல்லா’ நாம் வெற்றியடைவோம்” என்று நஜிப் கூறினார்.

#TamilSchoolmychoice

மேலும், உள்கட்சி பூசல்களும், சதிவேலைகளும் இருந்தால் மட்டுமே 14 வது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணிக்கு தோல்விகள் வரும். அப்படி ஒரு சதிவேலையை கட்சியினர் செய்யமாட்டார்கள் என்று முழு நம்பிக்கை உள்ளது. இன்று வரையில் தேசிய முன்னணியும், அம்னோவும் ஒற்றுமையுடன் தான் உள்ளது” என்று நஜிப் தெரிவித்தார்.

“இதுவரையில், மக்கள் எனக்கு தலைமைப் பொறுப்பை வழங்குகின்றார்கள். எனவே நான் தொடர்ந்து இந்நாட்டிற்கு தலைமை வகிப்பேன்” என்றும் நஜிப் குறிப்பிட்டார்.