Home படிக்க வேண்டும் 2 12 மணி நேரத்தில் 2.11 மில்லியன் செல்பேசிகள் விற்பனை – சியாவுமி கின்னஸ் சாதனை!

12 மணி நேரத்தில் 2.11 மில்லியன் செல்பேசிகள் விற்பனை – சியாவுமி கின்னஸ் சாதனை!

531
0
SHARE
Ad

xiaomiபெய்ஜிங், ஏப்ரல் 10 –  செல்பேசிகளின் விற்பனையில், தங்கள் நிறுவனம் கின்னஸ் சாதனை நிகழ்த்தி உள்ளதாக சியாவுமி நிறுவனம் அறிவித்துள்ளது. சியாவுமி நிறுவனத்தின் 5-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை, சிறப்பு சலுகை விற்பனையை அந்நிறுவனம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, 12 மணி நேரத்தில் 2.11 மில்லியன் செல்பேசிகள் விற்பனையாகி உள்ளன.

இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி லீ ஜுன் கூறுகையில், “சியாவுமி செல்பேசிகள் விற்பனையில் உலக சாதனை நிகழ்த்தி உள்ளது. அதிக அளவில் விற்பனை நடைபெறும் என்று நினைத்து இருந்தோம். ஆனால், உலக சாதனை நிகழ்த்தும் அளவிற்கும் விற்பனை நடைபெறும் என்று நினைக்கவில்லை. இந்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில், கின்னஸ் அமைப்பு சான்றிதழ் வழங்கியது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

இந்த விற்பனையின் மூலம் சியாவுமி, 2.08 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

கடந்த 2014-ம் ஆண்டு கணக்கீட்டின் படி, 74.3 பில்லியன் யுவான்களை வருவாயாக பெற்றுள்ள சியாவுமி, உலக அளவில் சாம்சுங், ஆப்பிளை அடுத்த மூன்றாவது பெரிய நிறுவனமாக முன்னேறி உள்ளது.