Home இந்தியா தமிழர்கள் சுடப்பட்ட விவகாரம்: பன்னீர் செல்வத்திற்கு சந்திரபாபு நாயுடு கடிதம்!

தமிழர்கள் சுடப்பட்ட விவகாரம்: பன்னீர் செல்வத்திற்கு சந்திரபாபு நாயுடு கடிதம்!

546
0
SHARE
Ad

Tamil-Daily-News-Paper_88173639775ஐதராபாத், ஏப்ரல் 10 – ஆந்திர வனப்பகுதியில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் அம்மாநில காவல்துறையினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

கடிதத்தில் சந்திரபாபு நாயுடு கூறியதாவது; “இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆந்திர போலீசார் தமிழர்களை சுட்டு கொன்றது போலி துப்பாக்கிச் சூடாக இருக்கும்பட்சத்தில் இது தொடர்பாக நீதி விசாரணை நடத்த உத்தரவிட தயாராக இருப்பதாகவும்” குறிப்பிட்டுள்ளார்.