Home நாடு அல்தான்துயா வழக்கில் ஆர்சிஐ விசாரணை அமைக்க வேண்டும் – லிம் கிட் சியாங்

அல்தான்துயா வழக்கில் ஆர்சிஐ விசாரணை அமைக்க வேண்டும் – லிம் கிட் சியாங்

524
0
SHARE
Ad

Lim Kit Siangகோலாலம்பூர், ஏப்ரல் 10 – அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கை விசாரணை செய்ய அரச விசாரணை ஆணையம் (RCI) ஒன்றை அமைக்க வேண்டும் என ஜசெக கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்த கொலை வழக்கில் தனக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பதை நிரூபிக்க பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு இந்த ஒரு வழி மட்டுமே உள்ளது என்றும் ஜசெக குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து ஜசெக மூத்த தலைவரும், கேலாங் பாத்தா நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் கிட் சியாங் கூறுகையில், “மங்கோலியப் பெண் (அல்தான்துயா) மரணத்திற்கான காரணம் என்ன? அவரை கொலை செய்யச் சொல்லி உத்தரவிட்டது யார்? காவல்துறை, சட்டம் மற்றும் நீதித்துறையால் கூட இந்த கொலைக்கான அடிமட்ட காரணங்களை கண்டறியாமல் போனது ஏன்? போன்ற கேள்விகளை முன்வைத்து அரச விசாரணை ஆணையம் விசாரணை நடத்த வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், “அல்தான்துயா யார் என்றே தெரியாது மற்றும் தான் இந்த கொலையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்படவில்லை என்று நஜிப் கூறுகிறார். பின்னர் ஏன் இந்த கொலை வழக்கில் முழு விசாரணை நடத்த உத்தரவிட தயங்குகின்றார்?” என்றும் லிம் கிட் சியாங் கேள்வி எழுப்பியுள்ளார்.

“மங்கோலிய அழகியை கொலை செய்ய அந்த இரு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது யார்? மற்றும் அவரது உடலை இராணுவ வெடிப்பொருட்களைக் கொண்டு தகர்க்கச் சொன்னது யார்? என்ற கோணத்தில் விசாரணை அமைய வேண்டும்” என்றும் லிம் கிட் சியான் கூறியுள்ளார்.