Home கலை உலகம் டுவிட்டரில் ரெய்னாவை மாப்பிள்ளை என கூறிய சூர்யா!

டுவிட்டரில் ரெய்னாவை மாப்பிள்ளை என கூறிய சூர்யா!

616
0
SHARE
Ad

suresh-rainaசென்னை, ஏப்ரல் 10 – ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதின. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் வெற்றிக்கு கடைசி 2 பந்தில் 8 ரன்கள் தேவைப்பட்டது. அதில், முதல் பந்தை அல்பி மார்கல் பவுண்டரிக்கு விரட்ட அதை தனது திறமையான பீல்டிங் மூலம் தடுத்து நிறுத்தி சென்னை அணிக்கு 2 ரன்களை மிச்சப்படுத்தி கொடுத்தார் ரெய்னா.

அதற்கடுத்த பந்தில் டெல்லி டேர்டெவில்ஸ் 4 ரன்களை மட்டுமே எடுத்தால் சென்னை அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் பந்தை ரெய்னா பவுண்டரிக்கு செல்ல விட்டிருந்தால் சென்னை அணி தோல்வி கண்டிருக்கும்.  ரெய்னாவின் அபார பீல்டிங்கை பாராட்டி சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

aa35623a-54e9-464a-a7db-52e7a03de69f_S_secvpfஇதுகுறித்து அவர்  கூறும்போது; “மாப்பிள்ளை சூப்பர் மாப்பிள்ளை’ என்ன அழகா ரன்னை மிச்சப்படுத்தினார் ரெய்னா” என்று குறிப்பிட்டுள்ளார். ரெய்னாவுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. அதைத்தான் சூர்யா இங்கே மாப்பிள்ளை என்று குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.