Home நாடு கூச்சிங்கில் நாளை ஜாக்கி சானை சந்திக்கலாம்!

கூச்சிங்கில் நாளை ஜாக்கி சானை சந்திக்கலாம்!

660
0
SHARE
Ad

கூச்சிங், ஏப்ரல் 10 – ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டத்தோ ஜாக்கி சான் முன்பே ஊடகங்களில் அறிவித்தபடி, ஏப்ரல் 11-ம் தேதி தனது மலேசிய ரசிகர்களை சந்திக்கவுள்ளார்.

அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு கூச்சிங்கில் உள்ள ஓல்டு கோர்ட் ஹவுசில் இந்தச் சந்திப்பு நிகழவுள்ளது.

jackie-chan

#TamilSchoolmychoice

இத்தகவலை ‘2015 ஆசியான் அனைத்துலக திரைப்பட விழா மற்றும் விருது’ நிகழ்வின் இயக்குநர் லிவான் தாஜாங் உறுதி செய்துள்ளார். வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணி அளவில் கூச்சிங் அனைத்துலக விமான நிலையத்தை ஜாக்கி சான் வந்தடைவர் என்றார் அவர்.

“ரசிகர்களை சந்திக்கும் முன்னர், சுமார் 20 நிமிடங்கள் ஊடகவியலாளர்களுடன் ஜாக்கி சான் உரையாடுவார். இது மட்டுமே இந்தப் பயணத்தில் ஜாக்கி சான் பங்கேற்கும் பொது நிகழ்ச்சியாக இருக்கும். மற்றபடி கூச்சிங்கின் இனிமையை அனுபவிக்க விரும்புகிறார்” என்றார் லிவான்.

கூச்சிங்கில் உள்ள போர்னியோ மாநாட்டு மையத்தில் சனிக்கிழமை இரவு நடைபெறவுள்ள பிரமாண்ட நிகழ்ச்சியில் ஜாக்கி சானுடன் உள்ளூர் ஹாலிவுட் நட்சத்திரமான டான்ஸ்ரீ மிச்சல் இயோவும் மற்ற விருந்தினர்களுடன் பங்கேற்பார் என்பதை லிவான் உறுதி செய்தார்.

பத்து ஆசியா நாடுகளைச் சேர்ந்த 60 பிரபல கலைஞர்களுடன் சீனா மற்றும் கொரிய கலைஞர்களும் இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.

இந்த திரைப்பட மற்றும் விருது விழா நிகழ்வானது டிவி 2-ல் இரவு 9 மணியிலிருந்து நேரடியாக ஒளிபரப்பாகும் என்றும், இந்நிகழ்விற்கான சிவப்பு கம்பள வரவேற்பு இரவு 7.30 முதல் 8 மணி வரை டிவி 1-ல் நேரடியாக ஒளிபரப்பாகும் என்றும் லிவான் மேலும் கூறினார்.