Home கலை உலகம் மோடியின் பேச்சை கேட்கிறார் மல்லிகா ஷெராவத்!

மோடியின் பேச்சை கேட்கிறார் மல்லிகா ஷெராவத்!

610
0
SHARE
Ad

பாரிஸ், ஏப்ரல் 10 – “மல்லிகா நீ கடிச்சா .. நெல்லிக்கா போல் இருப்பா” என்று உலகமே தன்னைப் பற்றி பாடிக் கொண்டிருந்த வேளையில், பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தோ, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 63 வது பிறந்தநாளுக்கு பாட்டுப் பாடி பிறந்தநாள் வாழ்த்துகள் கூறி அசத்தினார்.

அந்த வீடியோ உலகமெங்கும் வைரலாக பரவ உற்சாகமான மல்லிகா,”மோடி எனக்கு மிகவும் பிடித்த தலைவர். என்றாவது அவரை நேரில் சந்தித்தே தீருவேன்” என்று தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தார்.

அவரின் ஆசை வீண் போகவில்லை. காரணம் மல்லிகாவுக்கு மின்னஞ்சல் வழி நேற்று இன்ப அதிர்ச்சி ஒன்று வந்தது.

#TamilSchoolmychoice

Untitled

பாரீஸ் நகரில் இன்று நடைபெறும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார ஒருங்கிணைப்பு (யுனெஸ்கோ) மாநாட்டில் கலந்து கொண்டு மோடியின் பேச்சை நேரடியாகக் கேட்கும் அழைப்பு தான் அது. மல்லிகாவின் மகிழ்ச்சியை பற்றி சொல்லவா வேண்டும்? துள்ளிக் குதித்து விட்டார்.

அழைப்பு கடிதத்தை படம் பிடித்து தனது டிவிட்டரில் பதிவு செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், நேற்று தொடங்கி, ‘மோடியின் பேச்சை கேட்க பாரிஸ் போய்க் கொண்டு இருக்கின்றேன்’, ‘ஜெய்ஹிந்த்’ என அங்கிருந்த படி டிவிட்டிக் கொண்டு இருக்கிறார்.

பாலிவுட்டில் இருந்து அழைக்கப்பட்டிருக்கும் ஒரே பிரபலம் மல்லிகா தான் என்பது கூடுதல் தகவல்.

மல்லிகா நெனச்சதெல்லாம் நடத்தி காட்டிடுவா!

-ஃபீனிக்ஸ்தாசன்