Home நாடு மகாதீர் நஜிப்பை விமர்சிப்பதை விட கலந்தாலோசிக்கலாமே? – கேவியஸ்

மகாதீர் நஜிப்பை விமர்சிப்பதை விட கலந்தாலோசிக்கலாமே? – கேவியஸ்

561
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 11 – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பை கடுமையாக விமர்சிப்பதை விட, தான் எழுப்பக்கூடிய விவகாரங்கள் குறித்து தேசிய முன்னணி தலைவர்களுடன் துன் மகாதீர் விவாதிக்க (ஆலோசிக்க) வேண்டும் என பிபிபி கட்சித் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் வலியுறுத்தி உள்ளார்.

2109-1

அவ்வாறு விவாதிக்கும் பட்சத்தில் துன் மகாதீர் எழுப்பக்கூடிய விவகாரங்கள் அனைத்திற்கும் சுமூகமாக தீர்வு காண முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“துன் மகாதீர் மீது அன்பு வைத்திருக்கிறோம். அவர் சொல்லும் அனைத்திற்கும் நாங்கள் முக்கியத்துவம் அளிக்கிறோம். அதே வேளையில் எந்த விஷயத்தையும் பொதுவாக விவாதிப்பதற்கு முன் அவர் எங்களுடன் கலந்து பேச வேண்டும்,” என்று பிபிபியின் 62-வது ஆண்டு விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேவியஸ் கூறினார்.

பிரதமராகவும் தேசிய முன்னணியின் தலைவர் என்ற வகையிலும் டத்தோஸ்ரீ நஜிப்பின் தலைமைத்துவத்திற்கு பிபிபி ஆதரவு தொடர்ந்து நீடிக்கும் என்று அவர் அறிவித்தார்.

“நஜிப்புக்கு மக்கள் தங்கள் ஆதரவை புலப்படுத்தியுள்ளனர். எனவே அவர் தனது பயணத்தை நிறைவு செய்யட்டும். மக்கள் (பொதுவாக) அவரை விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.படகு சற்றே ஆட்டம் கண்டுள்ளதால், எங்களது விசுவாசத்தை மாற்றிக்கொள்ள மாட்டோம். நஜிப்பின் தலைமைத்துவத்திற்கு எப்போதுமே ஆதரவு அளிப்போம்,” என்றார் கேவியஸ்.

மகாதீர் உட்பட பல்வேறு தரப்பினரும் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் நஜிப் தமது தொலைக்காட்சி பேட்டியில் உரிய விளக்கம் அளித்திருப்பதாகவும் கேவியஸ் கூறினார்.