Home நாடு ஜசெக எம்பி மீது நஜிப் சட்டப்பூர்வ நடவடிக்கை!

ஜசெக எம்பி மீது நஜிப் சட்டப்பூர்வ நடவடிக்கை!

404
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 11 – டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றார் என்று கூறியதை திரும்பப் பெற வேண்டும் என்றும் இது தொடர்பாக பேராக் ஐசெக தலைவர் ஞா கோர் மிங் (Nga Kor Ming) அடுத்த 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் வலியுறுத்தியுள்ளார்.

NAJIB TUN RAZAK

மன்னிப்பு கேட்க மறுக்கும் பட்சத்தில் ஐசெக எம்பி மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என்றும் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

இது தொடர்பான சட்ட அறிவிக்கை கடிதம் ஒன்று ஞா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நஜிப்பின் வழக்கறிஞர் டத்தோ முகமட் ஹஃபரிசாம் ஹருன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

“தனது அறிக்கையை திரும்பப் பெறுவதுடன் மன்னிப்பும் கோர வேண்டும் என மிங்கை கேட்டுள்ளேன். மேலும் தனது மன்னிப்பு அறிவிப்பை அவர் ஆங்கிலம் அல்லது மலாய் மொழிகளில் வெளியாகும் இரு உள்ளூர் நாளேடுகளிலாவது வெளியிட வேண்டும்.”

“இதற்காக எனது மனுதாரர்  48 மணி நேரம் அவகாசம் அளித்துள்ளார். அதற்குள் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோருவதுடன், தான் வெளியிட்ட புகைப்படம் மற்றும் கருத்துக்களை மிங் முழுமையாக திரும்பப் பெற வேண்டும்,” என்று டத்தோ முகமட் ஹஃபரிசாம் ஹருன் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் நட்பு ஊடகம் ஒன்றில், பிரதமர் நஜிப்பும் ரோஸ்மாவும் அமைச்சர்களுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட மிங், அமைச்சரவை கூட்டத்தில் பிரதமரின் மனைவி இருக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

எனினும், அப்புகைப்படம் அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்டது அல்ல என்பதும், பிரதமரின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணத்தின் போது எடுக்கப்பட்டது என்பதும் பின்னர் தெரிய வந்தது.