பாரிஸ், ஏப்ரல் 11 – இந்தியா, பிரான்ஸ் நாட்டிடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் மோடி, யுனெஸ்கோவில் உரை நிகழ்த்திய பின்னர் பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்ட் மற்றும் அந்நாட்டின் முக்கிய அமைச்சர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸுடன், இந்தியா சார்பாக பல்வேறு ஒப்பந்தகளை செய்துள்ள மோடி, அதனை தனது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். அதில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கூறப்படுவது, இந்திய விமானப்படைக்கு போர் விமானங்களை வாங்குவதாகும்.
இது தொடர்பாக மோடி குறிப்பிட்டுள்ளதாவது:-
“இந்தியாவில் போர் விமானங்களுக்கான தேவையை உணர்ந்து, முக்கிய ஒப்பந்தம் ஒன்று பிரான்ஸுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின் படி, ஹாலண்ட், இந்தியாவிற்கு 36 ரஃபேல் போர் விமானங்களை வழங்க சம்மதம் தெரிவித்துள்ளார்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.