Home அவசியம் படிக்க வேண்டியவை எம்எச்370 விமானத்தில் ஆபத்தான பொருட்கள் இல்லை!

எம்எச்370 விமானத்தில் ஆபத்தான பொருட்கள் இல்லை!

609
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 11 – மாயமான எம்எச் 370 விமானத்தில் ஆபத்தான பொருட்கள் ஏற்றிச் செல்லப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

mh370

அனைத்துலக வான் போக்குவரத்து ஆணையம், கடந்த மார்ச் 8ஆம் தேதி எம்எச் 370 தொடர்பில் வெளியிட்ட இடைக்கால அறிக்கையில் விமானம் மாயமானதற்கும், அதில் இருந்த சரக்குகளுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என குறிப்பிட்டிருப்பதாக போக்குவரத்து துணை அமைச்சர் அப்துல் அசிஸ் கப்ரவி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“600 பக்கங்கள் கொண்ட அந்த இடைக்கால அறிக்கையில், விமானிகளுக்கான அறை மற்றும் வான் கட்டுப்பாட்டு மையத்திற்கு இடையிலான உரையாடல், விமானத்தின் பயணப்பாதை ஆகியவை குறித்தும், விமான ஊழியர்கள் மற்றும் அதில் இருந்த சரக்குகள் குறித்தும் செயற்கைக்கோள் தரவுகள் அடிப்படையில் பல்வேறு விஷயங்களை தெளிவுபடுத்தப்பட்டுள்ளன,” என்று அப்துல் அசிஸ் கப்ரவி கூறியுள்ளார்.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பாஸ் கட்சி உறுப்பினர் டத்தோ கமாருடின் ஜாஃபர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாயமான விமானத்தில் ஏற்றப்பட்ட சரக்குகள் குறித்து அரசாங்கம் முழுமையான தகவல்களை வெளியிடவில்லை என டத்தோ கமாருடின் தனது கேள்வியில் குறிப்பிட்டிருந்தார்.

“விமானத்தில் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ள துப்பாக்கிகள், கூர்மையான ஆயுதங்கள், வெடி பொருட்கள் ஆகியவை எந்தச் சூழ்நிலையிலும் அனுமதிக்கப்படுவதில்லை. அவை கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக பறிமுதல் செய்யப்படுகின்றன,” என்றார் அப்துல் அசிஸ் கப்ரவி.